பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/865

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

lockout

864

logic


lockout : வெளித்தாழ் அடைப்பு : 1. இடை யீட்டை ஒடுக்குதல். 2. பல்முனை வகைப்படுத்து சூழலில் முக்கிய தரவுகளை ஒரே நேரத்தில் வகைப்படுத்தும் அலகுகள் பெற வகை செய்யும் நிரல் தொகுப்பு உத்தி.

lockup : பூட்டப்பட்ட முடக்கம் : மேலும் எந்தச் செயலும் நடைபெற முடியாத சூழ்நிலை.

log : பதிவு : பதிவு செய்தல் : ஒவ்வொரு வேலை அல்லது ஓட்டம், அதற்குத் தேவைப்படும் நேரம், இயக்குபவர் செயல்கள் மற்றும் தொடர்பான தரவுகளைப் பட்டியலிடும் தரவு செயலாக்கக் கருவியின் இயக்கங்களின் பதிவேடு.

logarithm : லாகரிதம்;மடக்கை : ஒரு குறிப்பிட்ட எண்ணை உருவாக்க ஒரு நிலை யெண்ணை எத்தனை மடங்கு அதிகரிக்க வேண்டும் என்பதைத் குறிப்பிடுவர். அது பொது வாக 10 அல்லது 0 ஆக இருக்கும். சான்றாக 2இன் 3 மடங்கு 8-க்குச் சமம் என்றால் 2இன் ஆதார எண்ணாகக் கொண்டு 8-ஐக் கொண்டுவர3 லாகரிதம் ஆகும். இதன் பொருள் 2-ஐ அதன் மூன்றாதாவது மதிப்புக்கு உயர்த்தினால் 8 வரும் என்பதாம்.

logarithm tables : மடக்கை அட்டவணை.

log book : பதிவுப் புத்தகம் : கணினி தொழிலுக்குக் கடன் வாங்கப்பட்ட கடல்துறை குழூஉக் குறி. வேலையில் இருக்கும் கணினி பணியாளர்களைப் பற்றியும் அவர்கள் செய்து முடித்த பணிகளைப் பற்றியும் பதிவேடு வைத்துக் கொள்ள இது உதவுகிறது. வன்பொருள் பராமரிப்பு நேர ஒதுக்கீடுகள் மற்றும் பழுதானவைகளைப் பற்றிய பதிவேடு வைத்திருக்கவும் இது உதவு கிறது.

logging off : முடித்தல்;வெளிவருதல் : கணி னிக்கும் அதைப் பயன்படுத்துபவருக்கும் இடையே யுள்ள தகவல் தொடர்பை முடித்து வைக்கும் செயல்முறை.

logging-in : உள் நுழைத்தல்;தொடங்கல்; கணிப்பொறியினுட் புகும் செயற்பாடு : உரையாடல் முறையில் ஒப்பமிட்டு கணினியைப் பயன்படுத்தும் உரிமை பெற்றவரைச் சோதித்துக் கணினியுடன் தகவல்தொடர்பு ஏற்படுத்திக் கொள்ளும் செயல் முறை.

logic : தருக்கம்;அளவை : தருக்கப் பொருத்தம் : அளவைப் பொருத்தம் : 1. காரண மறிதல், கருத்து ஆகிய முறையான கொள்கை களை ஆராயும் அறிவியல். 2. தானியங்கி தரவு