பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/869

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

logical unit number

868

logical diagram


logical unitnumber : தருக்கமுறை அலகு எண் : ஒரு பருப்பொருளாக உள்ள வெளிப்புற சாத னத்துக்குக் கொடுக்கப்படும் எண்.

logical value : தருக்கமுறை மதிப்பு : ஒரு குறிப்பிட்ட தருக்க முறை முடிவின் விளைவாக உண்மை அல்லது பொய்யாக மாறும் மதிப்பு.

logic analyser : தருக்க ஆய்வர் : இலக்க முறை அமைப்புகளின் தருக்க நிலைகளைக் கண் காணித்து பின்னர் காட்டுவதற்காக முடிவுகளை சேமிக்கும் ஒரு மின்னணு கருவி.

logic array : தருக்க வரிசை : மின்னணு வாயில்களின் வரிசை. கணினியின் பல்வேறு பணிகளை வாடிக்கையாளரின் சிறப்புத் தேவைக் கேற்ப செய்வதற்காக வரிசைப்படுத்தப்பட்டு அமைக்கப்படும் ஒருங்கிணைந்த மின்சுற்றுகள்.

logic board : தருக்கப் பகை.

logic bomb : தருக்க குண்டு : தரவுகளை அழிக்கும் நிரல் தொடர். அது வன்தட்டை மறுவடி வமைத்து அல்லது தரவு கோப்புகளில் தற்செயல் துண்மிகளை அமைத்து நாசம் செய்யலாம். பாழ்பட்ட வெளியில் கிடைக்கும் நிரல் தொடர்களை வாங்கி ஏற்று வதன் மூலம் இது பீ. சி. யில் கொண்டு வரப்படலாம். ஒரு முறை இயக்கப் பட்டால் நேரடியாக இது பாழாக்குவதில்லை. ஆனால், நச்சு நிரல் (வைரஸ்) அழித்துக் கொண்டே இருக்கும்.

logic card : தருக்கமுறை அட்டை : ஒன்று அல்லது மேற்பட்ட தருக்கப் பணிகள் அல்லது இயக்கங்களைச் செய்யக்கூடிய உறுப்புகள் அல்லது கம்பி யிணைப்புகளைக் கொண்ட மின்சுற்று அட்டை.

logic chip : தருக்க சிப்பு : செயலக அல்லது கட்டுப்பாட்டுச் சிப்பு.

logic circuits : தருக்க மின் சுற்றுக்கள் : ஒரு கணினி அமைப்பின் குறிப்பிட்ட பகுதியின் உள்ளேயும் வெளியேயும் மின் துடிப்புகளைச் செலுத்தும் ஏற்ற இறக்கத் தொடர்.

logic control statement : தருக்கமுறை முறைக் கட்டுப்பாட்டுக் கட்டளை அறிக்கை.

logic device : தருக்க சாதனம் : ஒரு சாதனத்தை அடையாளம் காட்டும் ஒரு பெயர் அல்லது அடையாளம்.

logic diagram : தருக்க வரைபடம் : தருக்க முறை வடிவமைப்பைக் குறிப்பிடும் வரைபடம். சில சமயங்களில் வன்பொருள்