பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/870

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

logic drive

869

logic operations


இயக்கத்தையும் இதில் குறிப்பிடுவதுண்டு.

logic drive:தருக்க இயக்கி:வன் வட்டு போன்ற பருப்பொருள் சேமிப்பு ஊடகம்.இயக்க அமைப்பு இயக்க அமைப்பிலிருந்து பிரிக்கப்பட்டு தனியான சேமிப்பகங்களாக்கப்படுகிறது.ஒரு வன்தட்டு 12 மெகா பைட் மீமிகு எண்மி சேமிப்புத் திறன் உள்ளதாக இருக்கலாம்.ஆனால் இயக்கு வதற்கு வசதியாக 42 மீமிகு எட்டியலை இரண்டு 'தருக்க இயக்கி" களாகப் பிரிக்கலாம்.எம்.எஸ் - டாசில் (MS-DOS) இரண்டு இருப்பிடங்களும் சி மற்றும் டி இயக்கி எனப்படும். (ஏ, பி மென் வட்டு இயக்கிக்கு ஒதுக்கப்பட்டிருக்கும்).இங்கு சி-யும், டி-யும் பொதுவான சேமிப்பு ஊடகத்தைப் பங்கிட்டுக் கொள்ளும்.

logic element:தருக்கப் பொருள்:ஒரு தருக்கப்பணியைச் செய்யும் சாதனம்.

Logic error:அளவைப் பிழை:தருக்க முறைப்பிழை:நிரல் தொடரில் ஏற்படும் பிழை. இதனால் நிரல் தொடர் ஓடுவது பாதிக்கப்படாது. ஆனால்,வெளியீட்டில் பிழை ஏற்படலாம்.அளவை பிழை உள்ள நிரலாக்கத்தொடர்கள் முதலிலிருந்து கடைசி வாக்கியம் வரை ஓடும்.ஆனால்,தவறான விடையையோ அல்லது வெளியீட்டையோ தரும்.

logic expression:தருக்கமுறை எண்ணுருக்கோவை.

logic family:தருக்க குடும்பம்:ஒரே உற்பத்தி தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டு பல தருக்கப் பணிகளை வழங்கும் மின்னணு சாதனங் களின் வரிசை,

logic field:தருக்க முறைப்புலம்.

logic file:தருக்கக் கோப்பு:தட்டு அல்லது நாடாவில் உள்ள ஒரு கோப்பைக் குறிப்பிடும் பெயர் அல்லது அடையாளம்.

logic gates:தருக்க வாயில்கள்: மின் இலக்க முறை மின்சுற்றில் உள்ள பொருள்கள்.

logic log on:,தருக்க லாக் ஆன்: ஒரு கணினி அமைப்புக்கு அதனை பயன்படுத்துபவர் தன்னை அடையாளம் காட்டிக்கொள்ளும் செயல்முறை.

'logic operation:தருக்க இயக்கம்: ஒன்று அல்லது மேற்பட்ட உள்ளீடுகளை ஆராய்ந்த விதி களின் அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட வெளியீட்டை உருவாக்கும் இயக்கம்.