பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/871

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

logic operator

870

logic in name


logic operator : தருக்க இயக்கி : And, Or, Nand, Nor, Executive Or போன்ற பூலியன் இயக்கிகளில் ஒன்று.

logic probe : தருக்க ஆராய்ச்சி : மின்னணு சோதனைக் கருவிகளில் ஒன்று. இது தருக்க நிலை களில் ஒன்றை உண்மை (தருக்க 1), பொய் (தருக்க 0) - காட்டும் திறனுடையது.

logic programming : தருக்க நிரல் தொடரமைப்பு : சிக்கல்களை உரைக்கவும் தீர்க்கவும் தருக்கத் தையும், அனுமானத்தையும் பயன்படுத்தும் உடன் தொடர்புள்ள அறிவுக் குறிப்பீட்டு அணுகுமுறை.

logic programming language : தருக்க நிரல் தொடர் மொழி : நிரல் தொடரமைப்பு மொழி களில் ஒரு பிரிவு.

logic seeking : தருக்க தேடல் : இரு திசைகளிலும் செயல்படும் அச்சுப்பொறி சுருக்கமான அச்சிடும் பாதையைக் கண்டு பிடிக்கும் திறன்.

logic seeking : தருக்கமுறை தேடல்.

logic seeking printer : தருக்கம் தேடும் அச்சுப் பொறி : வரியின் உள்ளடக்கத்தைத் தேடி அதி வேகத்திலும் வெற்றிடத்தைத் தாண்டிச் செல்லக் கூடிய அச்சுப்பொறி.

logic symbol : தருக்கக் குறியீடு : ஒரு தருக்கப்பொருளை வரைபட முறையில் குறிப்பிடும் குறியீடு.

logic theorist : தருக்கக்கொள்கையியலார் : கணிதக்கொள்கைகளை எண்பிக்கப் பயன்பட்ட ஆரம்பகால தகவல் செயலாக்க நிரல் தொடர்.

logic theory : தருக்கக்கொள்கை : கணித இயக்கங்களின் அடிப்படையாகக் கொண்ட அளவை இயக்கங்களைப் பற்றிக் கூறும் அறிவியல்.

logic tree : தருக்க மரம் : கிளை பிரி உருவகிப்புகளைப் பயன்படுத்தும் ஒரு தருக்க வழிமுறையாகும். மரத்தின் ஒவ்வொரு கிளைக் கணுவும் ஒரு தீர்வுசெய் புள்ளியைக் குறிக் கின்றன. கிளையின் நுனியில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை குறிக்கப்பட்டிருக்கும்.

log in : உள் நுழைதல் : கணினியில் ஒப்பமிட்டுப் பணி துவங்குதல். Log on போன்றது.

log in name : உள்நுழையும் பெயர் : கணினி அமைப்பு ஒரு பயன்படுத்துபவரை அறிந்து கொள்ளும் பெயர். password-க்கு உடன்பாட்டுச் சொல் அல்ல.