பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/872

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

login security

871

long file names


login security:உள்நுழை காப்பு.

logo:லோகோ: உயர்நிலை நிரல் தொடர் மொழி.வரைபடமுறை முகப்பு பயன்படுத்து வோரிடம் உள்ளது என்று அனுமானிப்பது. மாணவர்களுக்காக வடிவமைக்கப்பட்டது. இளை ஞர்கள் அதிகம் பயன்படுத்துவது.வணிகம் மற்றும் தொழில்துறைகளில் வரைபட முறை அறிக்கை களை உருவாக்குவதற்கு அதிகம் பயன்படுவது. உரையாடல் முறையில் செயல்பட அனுமதிக்கும். இது திரையில் படங்கள் மற்றும் கணிதப் படங்களை வரைய எளிதில் கற்றுத்தருகிறது. செய்மோர் பாபர்ட் என்பவரால் எம்.ஐ. டியில் உருவாக்கப்பட்டது.

log off (log out):லாக் ஆப் (லாக் அவுட்): பயன்படுக்துபவர் ஒருவர் தன் வேலை நேரத்தை முடித்துக் கொள்வதை இது குறிப் பிடுகிறது.

logon:துவங்குதல்;நுழைமுறை:முகப்பு இயக்கத்தை ஒரு பயன்படுத்துபவர் துவங்குவது.

logon file:நுழைமுறை கோப்பு:தொடங்கு கோப்பு: புகுதி கைக்கோப்பு.

logotron logo:லோகோட்ரான் லோகோ: மற்ற லோகோக்களுடன் ஏற்புடைத்தான இதில் 16 கிலோ எண்மி (பைட்) சிப்பு உள்ளது.

log out:நிறுத்துதல்;வெளிவரு முறை: கணினியைப் பயன்படுத்துவதை நிறுத்துதல். log of போன்றது.

long:நீண்ட:நிரல் தொடரமைப்பில் பயன்படுவது. 'சி' மொழியில் நீண்ட என்பது 4 எண்மி (பைட்டு)கள்.அதில் ஒப்பமிடலாம் (-2 ஜி முதல் +2ஜி) அல்லது ஒப்பமிடாமல் விடலாம் (4ஜி).

long card:நீண்ட அட்டை: பீ.சி-க்களில், முழு நீள கட்டுப்பாட்டு அட்டை. அதனை விரி வாக்கத்துளைகளுடன் ஸ்லாட்டுடன் பொருத்த முடியும்.

long file names:நீண்ட கோப்புப் பெயர்: அண்மைக்கால பீசி இயக்க முறைமைகளில், குறிப்பாக விண்டோஸ் 95/98, விண்டோஸ் என்டி மற்றும் ஒஎஸ்/2 ஆகியவை கோப்புகளுக்கு மிக நீண்ட பெயர்களைச் சூட்ட, பயனாளருக்கு வாய்ப்புத் தர கிறது. 250-க்கு மேற்பட்ட எழுத்து களில் கோப்பிற்குப் பெயர் சூட்டலாம்.ஆங்கிலச் சிறிய எழுத்து, பெரிய எழுத்து மற்றும் இரு சொற்களுக்கு இடையே இடவெளி இருக்கலாம்.