பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/873

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

long-haul

872

lookup reference


long-haul : லாங் ஹால் : நீண்ட தொலைவுகளுக்குத்தகவல்களை அனுப்பக்கூடிய திறனுள்ள மோடெம்கள் அல்லது தகவல்தொடர்புச் சாதனங்கள்.

longitudinal redundancy check : நீள் தொலைவு திரும்பவரல் சோதனை : பிழை சோதிக்கும் தொழில் நுட்பம். விவரத் தகவல் தொடர்புகளில் பயன்படுவது. இணை சோதனை எழுத்தை ஒவ்வொரு தரவுக் கட்டத்திற்குள் உள்ள ஒவ்வொரு பத்தியின் துண்மிகளிலும் அமைக்க முடியும்.

long lines : நீண்ட கம்பிகள் : நீண்ட தொலைவுகளுக்கு தகவல்களை அனுப்புவதைக் கையாளும் திறனுடைய மின் சுற்றுகள்.

look alike : போலத் தோன்றுதல்; தோற்றப்போலி : 1. ஒரு நிரல் தொடரை இயக்குவதன் மூலம் மற்றொன்றையும் இயக்கும் முறை அறிதல். 2. ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு படி எடுத்தல். போட்டியாளர்கள் ஒன்று போன்ற வேறொன்றை உருவாக்கி அளிப்பார்கள்.

look and feel : தோற்றமும் உணர்வும்; தோற்றம்- செயல்பாடு : ஒரு வன்பொருள் அல்லது மென்பொருளின் தோற்றம் மற்றும் செயல்பாட்டைக் குறிக்கும் தொடர். பெரும்பாலும் இத்தொடர் ஒப் பிட்டுச் சொல்லப் பயன்படுகிறது. (எ-டு) விண் டோஸ் என்டி-யின் தோற்றமும் உணர்வும் விண்டோஸ் 95 போலவே இருக்கிறது.

look in : உள் நோக்கு.

lookup : தேடியறி : விரிதாள் நிரல்களில் உள்ளிணைக்கப்படும் கூறு. ஒரு குறிப்பிட்ட விரிதாள் பரப்பில் பதிவு செய்யப்பட்டுள்ள தரவுத் தளத்தில் தரவுவை எளிதாகத் தேடியறியும் பொருட்டு முன்கூட்டியே தரவுத் தளத்தின் முதன்மை மதிப்புகளைக் கொண்ட தேடியறி (Look. up) அட்டவணை உருவாக்கப்பட்டிருக்கும். தேடியறி அட்டவணையில் கிடக்கை (Row) நெடுக்கை (Column) களில் தரவு பதியப்பட்டிருக்கும். ஒரு தேடி யறி செயல்கூறு (Lookup Function) இந்த அட்ட வணையில் கிடை மட்டமாகவோ செங்குத் தாகவோ குறிப்பிட்ட முதன்மை மதிப்பைத் தேடும். அதைக் கொண்டு மூலத்தரவு அட்டவணையில் அம்மதிப்புக் குரிய சரியான தரவுவைக் கண்டு சொல்லும்.

lookup function : தேடியறி செயல்கூறு.

lookup reference : தேடல் குறிப்பு.