பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/876

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

lotus 1-2-3

875

low activity


தொலைத்து விட்ட வட்டுப் பதிவேடுகள். ஒரு கோப்பினைச் சரியாக முடித்து வைக்காவிட்டால் இத்தகைய நிலை ஏற்படும். அதன் பயன்பாட்டி லிருந்து முறையாக வெளிவராமல் கணினியை நிறுத்தும்போது சில சமயம் இவ்வாறு ஏற் படுவதுண்டு.

lotus 1-2-3 : ஒரு மென் சாதனம் : அதன் பெயரே மூன்று பணிகளைக் குறிப்பிடும் ஒருங் கிணைந்த மென்பொருள் அமைப்பு. அகலத்தாள், தரவுத் தளம், வரைபடமுறை ஆகிய வைகளே இந்த 3பணிகள். தரவுத் தள மேலாண்மையுடன் மின் னணு பணித்தாளை இணைக்கிறது. இத்துடன் உடனடியாக படங்களாலான தரவு அல்லது வரைபட முறையை உருவாக்கும் திறனுடையது.

lotus add-in tool kit : லோட்டஸ் சேர்ப்பு கருவிப்பெட்டி : லோட்டசிடமிருந்து வரும் பாஸ்கல் போன்ற நிரல் தொடர் மொழி. லோட்டஸ் 1-2-3இன் மதிப்பு 3. 0-வில் இயக்குவதற்காக உரு வாக்க வேண்டிய தானியங்கிச் செயல்முறைகளை இது அனுமதிக்கிறது. இதில் ஒரு பதிப்பி (எடிட்டர்) தொகுப்பி (கம் பைலர்), பிழை நீக்கி (டி-பக்கர்) ஆகியவை இருக்கும். சேர்க்கும் பொருள்களைச் செய்பவர்கள் அதை பதிப்பு 3. 0-வுக்கு மாற்ற வசதி செய்து தருகிறது.

lotus manuscript : லோட்டஸ் கையெழுத்துப்படி : அறிக்கைகள் மற்றும் தொழில்நுட்ப ஆவ ணங்களை எழுத வடிவமைக்கப்பட்ட சொல் மற்றும் ஆவண செயலகம்.

lotus menu : லோட்டஸ் பட்டி : லோட்டஸ் 1-2-3-உடன் அறிமுகப்படுத்தப்பட்டு நடை முறையில் தர நிர்ணயமாக ஆன பட்டியல் 'மெனு'. அதில் சொற்களின் வரிசை இருக்கும். ஒவ்வொன்றிலும் ஒரு வாய்ப்பு அளிக்கப்பட்டு enter பொத்தா னையோ அல்லது சொல்லின் முதல் எழுத்தையோ அழுத்தி தேர்ந்தெடுக்க வசதி உள்ளது. சொல் வந்தவுடன், அதற்கான விளக்கமும் வரும்.

Lovelace, Ada Augusta : லவ் லேஸ், ஆடா அகஸ்டா : லவ்லே சின் சீமாட்டி ஆடா அகஸ்டின் நிரல் தொடர் அமைப்பதற்கான முக்கியச் சிந்தனை களை உருவாக்கினார். சார்லஸ் பாபேஜின் நண்பரும் சிறந்த கணித மேதையுமான இவர் பகுப்பு எந்திரம் பற்றி எழுதியுள்ளார்.

low activity : குறைந்த BLவடிக்கை; குறைந்த செயற்பாடு :