பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/879

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

low-order bit

878

ls


low-order bit : கீழ்வரிசை துண்மி : கணினி சொல்லின் வலது ஓரத்தில் உள்ள துண்மி.

low-res graphics : குறைந்த பிரிதிறன் வரைவியல்.

l. p. : எல். பீ : linear programming மற்றும் line printer என்பதன் குறும்பெயர்.

LPI (Lines per Inch) : எல். பீ. ஐ. (ஒரு அங்குலத்திற்கு இத்தனை வரிகள்)  : ஒரு செங்குத்தான அங்குலத்திற்கு எத்தனை வரிகள் அச்சிடப்படுகிறது என்பது.

LPM : எல். பீ. எம் : Line Per Minute என்பதன் குறும்பெயர்.

LPT : எல்பீடி : வரி அச்சுப் பொறியின் தருக்கநிலைச் சாதனப் பெயர். எம்எஸ்-டாஸ் இயக்க முறைமையில் இணைநிலை அச்சுப் பொறித் துறை (port) க்கென ஒதுக்கப்பட்ட பெயர். அதிக அளவாக மூன்று வைத்துக் கொள்ளலாம். எல்பீடி1, எல்பீடீ2, எல்பீடீ3 என அவை அழைக்கப்படும். பிஆர்என் (PRN) என்பதும் அச்சுப்பொறியைக் குறிக்கும் தருக்கநிலைச் சாதனப் பெயராகும். இதுதான் எம்எஸ்-டாஸில் முதன்மை அச்சுநகல் வெளியீட்டுக்கான சாதன மாகக் கொள்ளப்படுகிறது. பெரும்பாலும், எம்எஸ் டாஸில் எல்பீடீ1 என்பதும் பிஆர்என் என்பதும் ஒன்றாக இருக்கும்.

. lr : . எல். ஆர் : ஓர் இணைய தள முகவரி, லைபீரியா நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும்புவிப்பிரிவுக் களப்பெயர்.

LRC : எல். ஆர். சி : Longitudinal Redundancy Check என்பதன் சுருக்கம். அதன் நீள்பாதையில் ஒரு குறிப்பிட்ட துண்மி சரத்தில் இருந்து இணையானதுண்மியை உருவாக்கி பிழை சோதிக்கும் முறை. காந்த நாடா போன்ற வரிசை. பத்தி படிவத்தில் வி. ஆர். சி. யுடன் எல். ஆர். சி. பயன்படுத்தப்பட்டு ஒவ்வொரு எழுத்துக்கும் இணை எழுத்து உருவாக்கப்படுகிறது.

. ls : . எல்எஸ் : ஓர் இணையதள முகவரி, லெசோத்தோ நாட்டைச் சார்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

ls : எல்எஸ் : யூனிக்ஸ் இயக்க முறைமையில் ஒரு கட்டளை. நடப்புக் கோப்பகத்திலுள்ள உள் கோப்பகங்கள் மற்றும் கோப்புகளின் பட்டியலைக் காண்பிக்கச் செய்யும் கட்டளை. அல்லது ஒரு குறிப்பிட்ட கோப்பகப் பெயரைக் கட்டளையுடன்