பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

apprentice

87

archival backup


apprentice : பயிற்சியாளர்.

approximation : பகுதிக்கு ஏற்ற விதிகளின் தொகுதி.

arcade game : விதானத் தொகுதி விளையாட்டு : கணினி விளையாட்டுகள் நாணயத்தால் இயக்கப்படும் கருவிகளால் பிரபலமாக்கப்பட்டவை. இக்கருவிகள் உயர்திறன் கொண்ட வண்ண வரைவுருக்கள். உயர் வேகச் சித்திர இயக்கம், ஒலி வழங்குதல் ஆகிய திறன்களைக் கொண்டவை. பெரும்பாலும் விளையாட்டுக் குச்சிகளினால் திரையிலுள்ள வடிவம் கட்டுப் படுத்தப்படுகிறது. விளையாட்டுகளின் விதிப்படி கணினி மதிப்புப் புள்ளிகளை அளிக்கிறது.

Archie , ஆர்க்கி : பெயர் கொடா கோப்புப் பரிமாற்ற நெறிமுறையின் மூலம் இலவச ஆவணக்காப்பகங்களில் சேமித்து வைக்கப்பட்டுள்ள கோப்புகளைத் தேடிக் கண்டறியும் இணையப் பயன்பாடு. மான்ட்ரீல் நகரின் மெக்கில் (McGill) பல்கலைக்கழகத்திலுள்ள தலைமை ஆர்க்கி வழங்கன் கணினி, தன்னுடன் இணைக்கப்பட்ட கோப்புப் பரிமாற்ற நெறி முறை அடிப்படையிலான அனைத்து வழங்கன் கணினிகளிலிருந்தும் கோப்புப் பட்டியல்களைப் பதிவிறக்கம் செய்து, அவற்றை ஒன்றிணைத்து ஒரே பட்டியலாக்கி, அப்பட்டியலை அனைத்து ஆர்க்கி வழங்கன் கணினிகளுக்கும் நாள்தோறும் அனுப்பி வைக்கிறது. ஆவணக் காப்பகம் என்று பொருள்படும் ஆர்க்கிவ் என்ற சொல்லின் சுருக்கமே ஆர்க்கி ஆகும்.

archie server : ஆர்க்கி வழங்கன் கணினி, ஆர்க்கி சேமிப்பகம் : ஆர்க்கி சேவையகம் இலவசக் கோப்புப் பரிமாற்ற நெறிமுறைக் காப்பகங்களிலுள்ள கோப்புகளின் பெயர்களையும் முகவரிகளையும் கொண்ட பட்டியலை வைத்திருக்கும், இணையத்தில் இணைக்கப்பட்டுள்ள வழங்கன் கணினியின் பெயர்.

architectural protection : கட்டமைப்புப் பாதுகாப்பு : கட்டு மான காப்பு.

architecture : கட்டுமானம் : வடிவமைப்பு : கணினியின் உள் இயக்க நடவடிக்கைகளின் வடிவமைப்பு. நினைவக நிரல் பகுதி மற்றும் உள்ளீட்டு, வெளியிட்டு அமைப்புகள் கொண்டது.

archival : ஆவணக் காப்பகம் : தரவு ஒன்றை நீண்ட காலம் சேமிப்பது தொடர்பானது.

archival back up : ஆவண ஆதார நகல்.