பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/880

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

LS-120

879

lumen


குறிப்பிட்டு அதன் உள்ளடக்கத்தைப் பெற முடியும். இணையத்தில் ஏராளமான எஃப்டீபீ தளங்கள் பலவும் யூனிக்ஸ் முறைமையில் இயங்குபவை என்பதால் அத்தளங்களிலும் இக்கட்டளையைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

LS-120 : எல்எஸ்-120 : ஓர் ஒற்றை 3. 5 அங்குல நெகிழ் வட்டில் 120 எம்பி தரவுவைச் சேமிக்கும் திறனுள்ள ஒரு நெகிழ்வட்டு இயக்ககம். எல்எஸ்- 120 இயக்ககங்கள் பிற நெகிழ்வட்டு வடிவாக்கங்களுக்கும் ஒத்திசைவானவை.

LSB : எல். எஸ். பி : Least Significant Bit என்பதன் குறும்பெயர்.

LSC : எல். எஸ். சி : Least Significant Character என்பதன் சுருக்கம்.

LSD : எல். எஸ். டி : Least Significant Digit என்பதன் குறும்பெயர்.

LSI : எல். எஸ். ஐ : Large Scale Integration என்பதன் குறும்பெயர்.

. lt : . எல்டி : ஓர் இணையதள முகவரி லித்துவேனியா நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

. lu : . எல்யூ : ஓர் இணையதள முகவரி லக்ஸம்பர்க் நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப் பெயர்.

LU : எல்யூ : தருக்க அலகு எனப் பொருள்படும் Logical Unit என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். ஓர் ஐபிஎம் எஸ்என்ஏ பிணையத்தில் ஒரு தகவல் தொடர்பு உரையாடலின் தொடக்கம் அல்லது முடிவைக் குறிக்கும் புள்ளி.

LUG : எல்யூஜி : Linux Users Group என்பதன் முதலெழுத்துக் குறும்பெயர்.

luggable computer : எடுத்துச்செல் கணினி : கைப்பெட்டிக் கணினி : 1980களின் தொடக்கத் தில் அல்லது மத்திய காலத்தில் உருவாக்கப்பட்ட கையில் எடுத்துச் செல்லத்தக்க முதல் கணினிகள். இந்தத் தொடக்க காலக் கணினிகள் சிஆர்டீ அடிப் படையிலான காட்சித்திரைகளைக் கொண்டி ருந்தன. 20 பவுண்டுக்கு மேல் எடை கொண் டவை. நடுத்தரக் கைப்பெட்டியின் அளவுடையவை. எனவே தான் இப்பெயர் ஏற்பட்டது.

lumen : லூமென் : ஒளியின் ஓட்டத்தை அளக்கும் அலகு. ஒரு மெழுகுவர்த்தி 13 லூமென் களை உருவாக்குகிறது. 100வாட் பல்பு 1, 200 தருகிறது.