பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/881

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

lumena

880

LZW compression



lumena : லூமனா : டைம் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் பீ. சி. ஒவிய நிரல் தொடர். என். டி. எஸ். சி. ஒளிக்காட்சி (விடியோ) வெளியீடுகளை அது ஏற்று உருவாக்குகிறது. அதற்கு ஒரு ஒளிக்காட்சி வரைகலை தேவை.

luminance : ஒளிர்வு : பிரகாசத்தைக் கட்டுப்படுத்தும் கூட்டு ஒளிக்குறிப்பின் பகுதி.

luminance decay : ஒளிர்வு மங்குதல் : காட்சித்திரை முகப் பில் நீண்ட நேரத்துக்குப் பிறகு ஏற்படும் திரை வெளிச்சத்தின் குறைவு.

luminosity : ஒளிர்திறன்.

lurk : ஒளிவு; பதுக்கம் : ' ஒரு செய்திக் குழுவில் அல்லது நிகழ்நிலைக் கலந்துரையாடல்களில் தாம் எதுவும் அனுப்பாமல் கட்டுரைகளையும் செய்திகளையும் பெற்றுக் கொண்டிருத்தல்.

. lv : . எல்வி : ஒர் இணைய தள முகவரி லாத்துவியா நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப் பெயர்.

. ly : . எல்ஒய் : ஒர் இணைய தள முகவரி, லிபியா நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப் பெயர்.

lynx : லின்ஸ்க் : யூனிக்ஸ் பணித்தளத்தில் செயல்படும் ஒரு வலை உலாவி. உரைப் பகுதிகளை மட்டுமே பார்வையிட முடியும்.

. lzh : . எல்இஸட்ஹெச் : லெம் பெல்ஸிவ் மற்றும் ஹகுயாசு படிமுறைத் தருக்கப்படி இறுக்கிச் சுருக்கப்பட்ட காப்பகக் கோப்புகளின் கோப்பு வகைப்பெயர் (File Extension).

LZW compression : எல்இஸட்டபிள்யூ இறுக்கம் : கோப்புகளை இறுக்கிச் சுருக்குவதற்கான ஒரு படிமுறைத் தருக்கம் (algorithm). மீண்டும் மீண்டும் இடம் பெறும் ஒரே மாதிரியான சரங்கள் (strings) சில குறிப்பிட்ட குறியீடுகளால் மதிப்பீடு செய்யப்படுகின்றன. ஜிஆர்எஃப் இறுக்கு முறைக்கும் இதுவே அடிப்படை ஆகும்.