பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/882

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

M

881

machine, accounting


M



M : எம் (மெகா)  : Mega என்பதன் குறும்பெயர், பத்து இலட்சம் என்பது பொருள். சேமிப்புச் சாதனங்களின் திறனைக் குறிக்க அடிக்கடி பயன்படுத்தப்படும் பெயர்ச்சீட்டு.

M68000 : எம் 68000 : மோட்டோரோலா நிறுவனத்தால் தயாரிக்கப்படும் 16-துண்மி நுண்செய்முறைப்படுத்திச் சிப்பு. குறிப்பாக நுண்கணினிகளில் இது பயன்படுகிறது.

. ma : . எம்ஏ : ஓர் இணையதள முகவரி மொராக்கோ நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

Mac : மேக் : Apple Macintosh Computer என்பதன் சுருக்கம்.

MacBinary : மேக்பைனரி : ஒரு கோப்புப் பரிமாற்ற நெறிமுறை. மெக்கின்டோஷ் கணினிகளில் உருவாக்கப்பட்டு மெக்கின்டோஷ் அல்லாத கணினிகளில் சேமிக்கப்படும் கோப்புகளின் குறிமுறையைப் பாதுகாக்கப் பயன்படுகிறது. இக்கோப்புகளில் கோப்பின் உள்ளடக்கப் பகுதி, தரவுப் பகுதி, ஃபைண்டர் எனும் தேடு நிரலுக்கான பகுதி எனப் பிரிவுகள் இருக்கும்.

MacDraw : மேக் டிரா : ஆப்பிள் மெக்கின்டோஷ் கணினியின் வரைபடப் பணித்தொகுப்பு. கலைஞர்கள், கட்டடக் கலைஞர்கள், பொறியாளர்கள், வரைபடக் கலைஞர்கள் மற்றும் வரைபடக்கலை தொடர்புடைய தொழில் நுணுக்கக் கலைஞர்கள் ஆகியோருக்காக வடிவமைக்கப்பட்டது.

MAC driver : மேக் டிரைவர் : Media Access Control Driver என்பதன் குறும்பெயர். மைக்ரோசாஃப்ட் என். டி. ஐ. எஸ். தர நிர்ணயத்தை செயல்படுத்தும் கட்டமைப்பு ஏற்பி இயக்கி.

Mach : மேக் : கார்னஜி - மெல்லன் பல்கலைக்கழகம் உருவாக்கிய யூனிக்ஸ் போன்ற இயக்கஅமைப்பு (ஆப்பரேட்டிங் சிஸ்டம்).

machanics : விசையியல்; எந்திரவியல்.

machine address : எந்திர முகவரி.

machine, accounting : கணக்குப்பொறி, கணக்கிடு எந்திரம்.




56