பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/883

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

machine code

882

machine language subroutine


machine code : எந்திரக் குறியீடு; பொறிக் குறிமுறை : ஒரு எந்திரம் புரிந்து கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்ட இயக்கக் குறியீடு.

machine cycle : எந்திரச் சுழற்சி; பொறிச் சுழற்சி : குறிப்பிட்ட எண்ணுள்ள உள் நடவடிக்கைகளைச் செய்ய ஒரு கணிணி எடுத்துக்கொள்ளும் நேரம்.

machine dependent : எந்திரச் சார்பு ; பொறி சார்ந்த : ஒரு குறிப்பிட்ட வகைக் கணினியில் மட்டும் செயல்படும் மொழி அல்லது நிரல் தொகுப்பு தொடர்பானது. வன்பொருள் சார்ந்தது என்பதோடு சமமானது. எந்திரம் சார்ந்தது என்பதற்கு எதிரானது.

machine error : எந்திரப் பிழை; பொறித் தவறு : கருவிக்கோளாறு காரணமாக தகவலில் சரியானதிலிருந்து ஏற்படும் திரிபு.

machine independent : எந்திரச் சார்பிலி; பொறி சாரா : 1. கணினி முறைமையின் பண்புகளைச் சார்ந்ததாக இல்லாமல் பெரிதும் மொழி அல்லது நிரல் தொகுப்பு தொடர்பானது. 2. பல தயாரிப்பாளர்கள் உருவாக்கிய கணினிகளில் அல்லது ஒரே தயாரிப்பாளர் உருவாக்கிய பல எந்திரங்களில் நிரல் தொகுப்பு ஒன்றை இயக்கும் திறன். எந்திரச் சார்பு என்பதற்கு மாறானது.

machine instruction : எந்திர ஆணை; பொறி ஆணை : ஒரு கணினி நேரடியாகப் புரிந்து கொண்டு நிறைவேற்றக்கூடிய ஆணை.

machine intelligence : பொறி செயற்கை நுண்ணறிவு.

machine interruption : எந்திரக் குறிக்கீடு; எந்திர இடையீடு.

machine language : எந்திர மொழி; பொறி மொழி : கணினி ஒன்றின் அடிப்படை மொழி. எந்திர மொழியில் எழுதப்பட்ட நிரல் தொகுப்பு. அதனை கணினி மேலும் மொழிமாற்றம் செய்யத் தேவையில்லை.

machine language subroutine : எந்திர மொழி துணை வாலாயம் : சேர்ப்பி மொழியில் எழுதப்பட்ட துணை வாலாயம் (சப் ரொட்டீன்). உயர் நிலை மொழியில் எழுதப்பட்ட நிரல் தொடருடன் சேர்க்கப்படுகிறது. இத்தகைய துணை வாலாயம்களை விரைவாகவும் திரும்பத் திரும்பவும் செய்யப்படும் வேலைகளுக்கு அதிகம் பயன்படுத்துவார்கள். அத்தகைய நிரல் தொடர்கள் குறியீடு செய்யப்பட்டு நினைவகத்திலிருந்து