பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/885

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

macintosh application

884

Mac OS


புகழ்பெற்ற நுண்கணினி முறைமை. விசைப்பலகையுடன் முதன்மையான உள்வீட்டுக் கருவியாக சுட்டியைப் (Mouse) பயன்படுத்துகிறது.

macintosh application environment : மெக்கின்டோஷ் பயன்பாட்டுச் சூழல் : எக்ஸ் விண்டோஸின் சிஸ்டம் சாளரத்துக்குள்ளேயே மெக்கின்டோஷ் இடைமுகத்தை வழங்கக்கூடிய, ரிஸ்க் (RISC) செயலி அடிப்படையிலான முறைமைகளுக்குரிய ஒரு செயல்தள அமைப்பு (system shell). இது மேக் மற்றும் யூனிக்ஸ் ஆகிய இருமுறைமைகளுக்கும் ஒத்தியல்பானது. மெக்கின்டோஷில் செயல்படும் அனைத்துவகை செயல்தளத் தயாரிப்புகளுக்கும் ஏற்றது.

macintosh file system : மெக்கின்டோஷ் கோப்பு முறைமை : தொடக்கக் காலங்களில் தட்டைக் கோப்பு முறைமையே (Flat File System) பயன்பாட்டில் இருந்தது. அதன்பிறகு படிநிலைக் கோப்பு முறைமை (Hierarchical File System) அறிமுகப்படுத்தப்பட்டது.

macintosh user interface : மெக்கின்டோஷ் பயன்படுத்துபவர் இடைமுகம் : ஜெராக்ஸ் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டு 1981இல் ஜெராக்ஸ் ஸ்டாரில் பயன்படுத்தப்பட்ட மெக்கின்டோஷை இயக்கும் முறை. வரைகலையைப் பயன்படுத்தி ஐக்கான்கள் எனப்படும் சிறிய படங்களின் மூலம் நிரல் தொடர்கள், கோப்புகள், மடிப்புகள் மற்றும் வட்டுகளைக் குறிப்பிடுகிறது. சுட்டி பொத்தானை நகர்த்தும்போது திரையில் உள்ள குறும்படம் நகர்ந்து, க்ளிக் செய்ததும் விருப்பப்படுவதைத் தேர்ந்தெடுக்கிறது. இது விண்டோஸ் போன்ற பலவற்றில் பயன் படுத்தப்படுகிறது.

MacIRMA : மெசிர்மா : மெக்கின்டோஷுக்கான தரவுத் தொடர்பு அட்டை. நுண்கணினியிலிருந்து பெருமுகக் கணினிக்கு மாற்றுவது. 3270 முனையத்தைக் கொண்டது.

Mac Lisp : ஆரம்ப கால எம். ஐ. டீ. ஏ. பி. ஐ. திட்டத்தின் பெயர். Machine Aided Cognition என்பதை உணர்த்துகிறது.

Mac OS : மேக் ஓஎஸ் : மெக்கின்டோஷ் இயக்க முறைமை எனப் பொருள்படும் Macintosh Operating System என்ற தொடரின் சுருக்கம். 1994 செப்டம்பரில் வெளியிடப்பட்ட 7. 5 ஆம் பதிப்புக்குப் பின்னரே மெக்கின்டோஷ் இயக்க முறைமை