பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/886

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Macpaint

885

macro recorder


மேக்ஓஎஸ் என அழைக்கப்படலாயிற்று. அப்போதிருந்து தான் ஆப்பிள் நிறுவனம் பிற கணினி உற்பத்தியாளர்களுக்கும் இதனை உருவாக்குவதற்கான உரிமம் வழங்கத் தொடங்கியது.

MacPaint : மேக்பெய்ன்ட் : மெக்கின்டோஷ் கணினிக்கான நவீன வரைபட நிரல் தொகுப்பு. வரைபட வெளியீட்டுக்கான பல பயன்பாடுகளை உடைய கருவிகளை வழங்கும் நிரல் தொகுப்பு.

macro : பெரும; அதிக : ஒற்றைக் குறியீட்டு நிரல் தொகுப்பு மொழிக்கட்டளை. அதனை மொழி பெயர்க்கும்பொழுது பல வரிசையான எந்திர மொழி கட்டளைகளை உருவாக்குகின்றன.

macro assembler : பெரும தொகுப்பி : பயன்படுத்துவோர் புதிய கணினி நிரல்களை உருவாக்கவும் அனுமதிக்கிற இணைப்பு. அப்புதிய கணினி நிரல்கள் பெரும நிரல்கள் என்றழைக்கப்படுகின்றன.

macro expansion : பெரும விரிவாக்கம் : மூல நிரல் தொடரில் உள்ள நுண் நிரல்களை எந்திர மொழியில் மாற்றும் செயல்முறை.

macro generator : பெரும ஆக்கி, ஜெனரேட்டர்.

macro instruction : பெரும ஆணை : 1. ஆதார மொழி நிரல்கள் - ஒரு குறிப்பிட்ட மொழி ஆணைகளுக்கு சமமானது. 2. பல குறு ஆணைகளால் உருவாக்கப்பட்ட எந்திர மொழி.

macro language : பெரும மொழி : பெரும செயலகம் பயன்படுத்துகின்ற கட்டளை. பெருமக்கட்டளைகளை பயன்படுத்துகிற சேர்ப்பி மொழி.

macro media flash : மேக்ரோமீடியா பிளாஷ்.

macro processor : பெரும செயலகம் : விசைப் பலகையிலிருந்து மேக்ரோக்களை உருவாக்கி செயல்படுத்துகின்ற மென்பொருள். மேக்ரோ அழைப்புகளுக்காக மேக்ரோ துணைவாலாயம்களை மாற்றித் தருகின்ற பொறி மொழியாக்கியின் பகுதி.

macro programming : பெரும செயலாக்கம் : குறும வகைப்படுத்தி ஒன்றுக்கான கட்டுப்பாட்டு நிரல் தொகுப்பு போன்ற பெரும நிரல்களை நிரல் தொகுப்பாக்குதல்.

macro recorder சுருக்க ஆணை; ஆணைச் சுருக்கி : பட்டியல் தேர்வுகள் மற்றும் விசை அடிப்புகளை பெரிதாக