பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/893

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

magnetic tape sorting

892

magneto optical disc


போன்றதே நாடாவிலும் வட்டுவிலும் பயன்படுத்தப்படுகிறது. இரண்டுக்கும் இடையிலான முக்கிய வேறுபாடு படி/எழுது மின்சுற்று மற்றும் பதிவு செய்யும் ஊடகம் ஆகியவற்றின் எந்திர ஏற்பாடுதான். எழுது முனையில் அதிக காந்தம் ஊடுருவக்கூடிய நடுப்பகுதியைக் கொண்ட பொருளினால் சுற்றப்படுகிறது. நடுப் பகுதியில் காந்தம் செல்வதற்கு காற்று இடைவெளியில் எழுதும் மின்சக்தி காந்த மேற்பரப்பில் செல்லும்போது அது காந்தப்படுத்தப்படுகிறது. எழுதும் மின்சாரத்தை எதிர்த் திசையில் அனுப்பும்போது காந்தசக்தியும் தலை கீழாகி இருமஎண் (பைனரி) அமைப்பு பதிவு செய்யப்படுகிறது.

magnetic tape sorting : காந்தநாடா வகைப்படுத்துதல்; காந்த நாடாவழி வரிசைப்படுத்தல் : வகைப்படுத்துதலின்போது துணை சேமிப்புக்காக காந்த நாடாக்களைப் பயன்படுத்துகிற வகைப்படுத்தும் நிரல் தொகுப்பு.

magnetic tape transport : காந்தநாடாப் போக்குவரத்து.

magnetic tape unit : காந்த நாடா அலகு : காந்த நாடா இயக்கியைக் கொண்ட கருவி. இத்துடன் எழுதுமுனைகளும் படிக்கும் முனைகளும் அவற்றுடன் இணைந்த கட்டுப்பாடுகளும் உடையது.

magnetism : காந்த விசை.

magnetized spots : காந்தமேற்றிய புள்ளிகள்.

magnitizing station : காந்தமேற்றிறும் நிலையம்; காந்தமூட்டு களம்.

magneto-optic : காந்த-ஒளியிழையிலான : அதிக அடர்த்தியுள்ள, அழிக்கக்கூடிய தரவு பதிவு செய்யும் முறை. இதிலும் தரவுகளை காந்த முறையில்தான் பதிவு செய்யப்படும். வட்டுகள் மற்றும் நாடாக்களில் செய்வதுபோல. ஆனால், துண்மிகள் மிகவும் சிறியதாக இருக்கும். ஏனென்றால் துண்மிகளைக் குறிப்பிட லேசர் பயன்படுத்தப்படுகிறது. 300 செல்ஷியஸ் வெப்பத்தில் துண்மிகளை வெப்பப்படுத்தி காந்தப்புலத்திற்கு ஏற்ப மறு வரிசைப்படுத்தப்படுகிறது. அதன் மேற்பரப்பில், புதிய துண்மிகளைப் பதிய வேண்டுமென்றால் இருக்கும் துண்மிகளை முதலில் ஏதாவது ஒரு திசையில் மாற்றி ஒழுங்குபடுத்த வேண்டும்.

magneto optical disc : காந்த ஒளியியல் வட்டு; காந்த ஒளிவ வட்டு.