பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/894

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

magneto optic disc

893

Mahon, Charles


magneto optic disc : காந்த ஒளிவ வட்டு : சிடி ரோம் வட்டுகளை ஒத்த மிக அதிகக்கொள்திறன் உள்ள அழித்தெழுத முடிகிற சேமிப்பகவட்டு. இதில் தரவுவைப் பதிய லேசர் கற்றையைப் பயன்படுத்தி வெப்ப மூட்டி வட்டின் ஒரு புள்ளியில் உள்ள காந்தப்புலத்தின் திசையை மாற்றி தரவு துண்மி (பிட்) யைப் பதிவு செய்வர்.

magneto-optical features : காந்த ஒளியியல் கூறுகள்.

magneto optical recording : காந்த ஒளிவப் பதிவு : ஒளிவ வட்டுகளில் தரவுவைப் பதிவதற்கான ஒரு வகைத் தொழில்நுட்பம். வட்டின் மீது பூசப்பட்டுள்ள காந்தப் பரப்பின் ஒரு மிகச்சிறு பகுதியை லேசர் கற்றை வெப்பமூட்டும். இந்த வெப்பம் பலவீனமான காந்தப் புலத்தின் திசையை மாற்றியமைக்கும். இவ்வாறு தரவுகள் வட்டில் எழுதப்படுகின்றன. இதே நுட்பத்தைப் பயன்படுத்தி வட்டிலுள்ள தரவுவை அழித்து மீண்டும் எழுதவும் முடியும்.

magnification : பெரிதாக்கம் ; உருப்பெருக்கம்.

magnifier : உருப்பெருக்கி; பெரிதாக்கி.

magnitude : திறன் : 1. எண் ஒன்றின் முழுமையான மதிப்பு. 2. ஒன்றின் பரும அளவு.

magstripe : காந்தப்பட்டி : பெரும்பாலான முக்கிய அட்டைகள் மற்றும் கணினிக்கு இயையக்கூடிய பயணச் செலவு அட்டைகளிலும் முதுகுப் பகுதியில் காணப்படும் காந்தநீள் பட்டை. இதில் கணக்கு எண் மற்றும் அட்டைக்கு உரியவரின் பெயர் அல்லது நுழைவு மற்றும் வெளியேற்றப் புள்ளிகள், மீதமுள்ள பயணத்தொகை முதலியன குறிக்கப்பட்டிருக்கும்.

magstripe card : காந்தப் பட்டை அட்டை : ஒரு சிறிய கைப்பை அளவு பிளாஸ்டிக் அட்டை. இதில் காந்த நாடாவின் மேற்பரப்பில் ஒரு பட்டை இருக்கும். வங்கிக்கடன் /செலுத்து அட்டைகளில் இதைப் பரவலாகப் பயன்படுத்துகிறார்கள்.

magtape : காந்த நாடா.

Mahon, Charles : (1753-1816) : மஹோன், சார்லஸ் (1753-1816)  : 1777இல் ஸ்டான்ஹோப் செயல்முறை விளக்கியைக் கண்டுபிடித்த ஸ்டான்ஹோப்பின் மூன்றாவது எர்ல். இந்தக் கருவிதான் பற்சக்கரங்களைக் கொண்ட முதல் கணக்கிடு எந்திரமாகும்.