பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/897

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

main distribution frames

896

main function


உள்ள கூறு (மாடுல்) களை இது கட்டுப்படுத்துகிறது.

main distribution frames : முக்கிய விநியோகச் சட்டம் : தரவுத்தொடர்பு முறையில் கம்பி மூலம் விநியோகிக்கும் அடுக்கு. பல மாடிக் கட்டிடங்களின் அடித்தளப் பகுதியிலேயே இது பெரும்பாலும் அமைக்கப்பட்டிருக்கும். உள்பகுதி மற்றும் வெளிப்பகுதி தரவுத் தொடர்புக் கம்பிகள் இணையும் இடம் இதுவே. mdf என்று சுருக்கி அழைக்கப்படும்.

mainframe : பிரதம அச்சு; முதன்மைப் பொறியமைவு : பெரும் விலையுயர்ந்த கணினி அமைப்பு. பொதுவாக பெரும் வணிக நிறுவனங்கள், கல்லூரிகள், பிற நிறுவனங்களில் தரவுகளை வகைப்படுத்த உதவுகிறது. துவக்கத்தில் இந்தச்சொற்றொடர் துவக்ககால கணினிகளில் இருந்த பெரிய இரும்புச் சட்ட வரிசைகளையும், வரிசையான இழுப்பறைகளையும் அவற்றில் உள்ள ஆயிரக்கணக்கான வெற்றிடக் குழாய்களையும் குறிக்கும். பிரதம அச்சு அறை முழுக்க ஆக்கிரமித்துக் கொண்டு பெருமளவு தரவுகளைக் கையாளும் திறன் கொண்டதாக இருந்தன. குறுங்கணினி அல்லது சிறு கணினிகளைவிட விலை உயர்ந்தவை. பிரதம அச்சுகள்தான் பெரிய, மிகவும் விரைவான விலையுயர்ந்த கணினி வகைகளாகும். பிரதம அச்சுகளைக் கொண்ட சூப்பர் கணினிகள் பெரியவை, விரைவானவை மற்றும் விலை உயர்ந்தவை.

mainframe computer : முதன்மைப் பொறியமைவுக் கணினி : ஆரம்பத்தில் மையச் செயலகத்தை மட்டுமே குறிப்பிடுவதாக பெருமுகம் என்ற சொல் பயன்படுத்தப்பட்டது. 1960களின் நடுவில் எல்லா கணினிகளும் பெருமுகங்கள் என்று அழைக்கப்பட்டன. ஏனென்றால், எல்லாவற்றிலும் மையச்செயலகம் உண்டல்லவா! இன்று மிகப்பெரிய கணினி அமைப்பையே இச்சொல் குறிக்கிறது. பல்லாயிரம் நேர்முக முகப்புகளைக் கையாளும் பெருமுகங்கள் பல உள்ளன. இவை நூற்றுக்கணக்கான மீமிகு எண்மி (மெகாபைட்) நினைவகங்களுடனும், பல நூறு கிகாபைட் வட்டுச் சேமிப்பகங்களுடனும் உள்ளன.

mainframe system : முதன்மைப் பொறியமைவு.

main function : மூல/முதன்மைப/முக்கிய மையச் செயல்கூறு :