பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/898

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

mainline programme

897

maintainability


ஒரு கணினி நிரலில் முக்கிய பகுதி. செயல்கூறு அடிப்படையிலான நிரலாக்க மொழிகளில் எழுதப்படும் நிரல்களில் செயல்கூறுகளை அழைத்து, பணியை நிறைவேற்றும் முதன்மையான செயல்கூறு. (எ-டு) சி-மொழியில் ஒரு நிரலில் எத்தனை செயல்கூறுகள் வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் main () என்கிற செயல்கூறு கட்டாயம் இருக்க வேண்டும். ஒரு நிரலானது அதில்தான் தொடங்கி முடியும்.

mainline programme : முதன்மைச் செயல்முறை : முதன்மை இணைப்பு நிரல் தொகுப்பு. நிரல் தொகுப்பில் பிற முனையங்களின் இயக்க முறைமையைக் கட்டுப்படுத்தும் பகுதி.

main loop (main line) : முக்கிய/மைய மடக்கி : ஒரு கணினி நிரலில் முதன்மைப் பகுதியில் இடம் பெற்றுள்ள மடக்கி. நிரலின் முக்கிய பணியை இந்த மடக்கிதான் நிறைவேற்றும். ஒரு குறிப்பிட்ட நிபந்தனை சரி அல்லது தவறாக இருக்கும்வரை இந்த மடக்கி செயல்பட்டுக் கொண்டிருக்கும். நிகழ்வு முடுக்க நிரலாக்கத்தில் (Event Driven Programming) இந்தப் பிரதான மடக்கி, இயக்கமுறைமையிடமிருந்து பெறப்படும் நிகழ்வுகளுக்காகக் காத்திருந்து அவற்றைப் பெற்றுச் செயல்படுத்தும்.

main memory : முதன்மை நினைவகம், முகமை நினைவகம்; முதன்மை நினைவுப் பதிப்பி; தலைநிலை; நினைவுப் பதிப்பி.

main method : முதன்மை வழி முறை.

main segment : முக்கிய/ முதன்மை/மையத் துண்டம் : மெக்கின்டோஷ் கணினிகளில் ஒரு நிரலின் முதன்மையான குறிமுறைப் பகுதி. அந்த நிரல் நிறைவேற்றப்பட்டு முடியும்வரை இப்பகுதி நினைவகத்தில் ஏற்றப்பட்டு அழியாமல் இருக்கும்.

main storage : முதன்மைச் சேமிப்பு : முதன்மைத் தேக்ககம் : மையச் செயலகத்தினால் நேரடியாகக் கட்டுப்படுத்தப்படுகிற நேரடியாக அணுகக்கூடிய சேமிப்பகம். நிரல் தொகுப்புகளை நிறைவேற்றும்பொழுதே அவற்றைச் சேமிக்க உதவுகிறது. தரவுகளை முறைப்படுத்தும் பொழுதே சேமிக்க உதவுகிறது.

maintainability : பராமரிப்பு இயைபு : பேணு திறன் : பழுது


57