பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/899

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

maintenance

898

major geographic domain


ஒன்றினைச் சீர் செய்தல் மற்றும் தனித்து விடலுடன் தொடர்புடைய பண்பு.

maintenance : பேணல்; பராமரிப்பு : தவறுகளைக் களைய அல்லது வன்பொருள் அல்லது நிரல் தொகுப்புகளை திருப்திகரமான பணிநிலைமையில் வைத்திருக்க மேற்கொள்ளப்படும் நடிவடிக்கைகள். இவற்றில் சோதனைகள், அளவில், மாற்றல், சீர் செய்தல் மற்றும் பழுது பார்த்தல் ஆகியவையும் அடங்கும்.

maintenance, file : கோப்புப்பராமரிப்பு.

maintenance programmer : பராமரிப்பு ஆணையர்; பேணல் ஆணையர் : ஏற்கெனவே தகவல் முறைமை ஒன்றில் சேர்க்கப்பட்ட நிரல் தொகுப்பு ஒன்றுடன் பணியாற்றுகிறவர். தேவையான மாற்றங்களை அவ்வப்போது செய்கிறவர்.

maintenance programming : பராமரிப்பு நிரலாக்கம்.

maintenance routine : பராமரிப்பு வழமை ; பேணல் முறைமை : கணினி முறைமை ஒன்றில் வழமையான தடுப்புப் பராமரிப்புப் பணிகளை வாடிக்கையாளரான பொறியாளர் ஒருவர் நிறைவேற்ற உதவும் வாடிக்கையான நடவடிக்கைகள்.

maintenance service : பராமரிப்புப் பணி ; பேணுதல் பணி : ஒரு பொருளை நன்றாக இயங்கும் நிலையில் வைத்திருக்க அளிக்கப்படும் சேவை.

maintenance, updating and file : இற்றைப்படுத்தலும் கோப்புப் பேணலும்.

maintenance wizard : பராமரிப்பு வழி காட்டி.

MAIT : மைட் : Manufacturer's Associaton of Information Technology, India என்பதன் குறும்பெயர்.

Majordomo : மேஜர்டோமோ : இணையத்தில் அஞ்சல் பட்டியல்களை மேலாண்மை செய்யும் செல்வாக்குப் பெற்ற மென்பொருள்.

major geographic domain : பெரும் புவிப்பிரிவுக் களம் : இணைய களப் பெயர்களில் (Domain names) ஈரெழுத்து முகவரி. இணைய தளப் புரவன் (Host) அமைந்துள்ள நாட்டின் பெயரைக் குறிக்கும். தளப்பெயர்களில் புவிப்பிரிவுக் களப்பெயர் பெரும்பாலும் இறுதியில் இடம் பெறும். (எ-டு) uiuc. edu. us - அமெரிக்காவில்