பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/904

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

mar

903

mark sensing


கிணைப்பு முறையினை மற் றொரு ஒருங்கிணைப்பு முறை மையில் பயன்படக் கூடியதாக மாற்றியமைத்தல்.

mar : மார் : Memory Address Register என்பதன் குறும்பெயர்.

Margie : : Memory Analysis and Response Generation in English என்பதன் குறும்பெயர்.

margin : விளிம்புக்கோடு : ஓரம் இடம் : பக்கம் அல்லது சாளரம் ஒன்றின் வலது அல்லது இடது முனைக்கும் உரைத்தொகுப்பு துவங்கும் இடத்துக்கும் இடையே உள்ள தூரம்.

marginal checking : கோடு சோதனை : தடுப்புப் பராமரிப்பு நடைமுறை. இதில் சோதிக்கப்படும் அலகு அதன் இயல்பான மதிப்பீட்டிலிருந்து வேறுபட்டதாக அமைகிறது. விளிம்பு நிலையில் இயங்கும் உதிரிபாகங்களைக் கண்டறிவதும் அவற்றின் இருப்பிடத்தை உறுதி செய்யும் முயற்சியில் இப்பணி மேற்கொள்ளப்படுகிறது.

marginal max. value : அதிகபட்ச மதிப்பு.

marginal min. value : குறைந்தபட்ச மதிப்பு.

marginal test : விளிம்பு நிலை சோதனை : எதிர்பார்க்கப்படும் மதிப்புகளுக்கு மிகவும் அதிகமானதும் மிகவும் குறைவானதுமான மதிப்புகளை அறிமுகப்படுத்தும் அமைப்புச் சோதனை.

mark : குறியீடு : காலம் அல்லது இடத்தில் ஒரு நிகழ்வைச் சுட்டிக்காட்டுகிற அல்லது குறிப்பிடுகிற அடையாளம் அல்லது குறியீடு.

marker : சுட்டி அடையாளங்காட்டி ; அடையாளக் குறி : வரிக்கோட்டுப் பட்டியலில் புள்ளி விவர முனைகளைக் குறிப்பிட உதவும் குறியீடு. இக்குறியீடு வடிவங்களில் வட்டங்களும், x, பெட்டிகள், நட்சத்திரங்கள், மற்றும் புள்ளிகளும் அடங்கும்.

marker, end of file : கோப்பு இறுதிக் குறியீடு.

mark sense card : குறியீட்டு உணர்வு அட்டை : கணினி படிக்கக்கூடிய அட்டை. மின்சாரம் கடத்தும் பென்சிலின் மூலம் இதை அடையாளப்படுத்தலாம்.

mark sensing : அடையாள உணர்திறன்; குறி உணர்தல் : அட்டைகள் அல்லது பக்கங்களை பென்சில் ஒன்றினால், அடையாளம் உணர்திறன் கருவி ஒன்றினால் கணினி நேரே படிக்கும் வகையில் குறிக்கும் திறன். காலம் வீணாவதையும்,