பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/905

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

mark, tape

904

maskable interrupts


விசைகளைக் கையாளும் பொழுது ஏற்படும் தவறுகளையும் தவிர்க்க கையால் தரவுகளைப் பெறும், மிகவும் பயனுள்ள உத்தி.

mark, tape : நாடா குறியீடு.

markup language : குறியீட்டு மொழி : ஒர் உரைக் கோப்பில் உரைப் பகுதியை எந்த வடிவமைப்பில் அச்சுப்பொறியிலோ அல்லது திரைக் காட்சி யாகவோ வெளிக்காட்ட வேண்டும், எவ்வாறு வரிசைப்படுத்தி அதன் உள்ளடக்கத்தை தொடுத்துக் காட்டவேண்டும் என கணினிக்கு அறிவுறுத்தும் குறியீடுகளின் தொகுதியைக் கொண்ட மொழி. (எ-டு) மீவுரைக் குறியீட்டு மொழி (HTML) வலைப்பக்கங்களை வடிவமைக்கப் பயன்படுகிறது. 2. செந்தரப் பொதுமைக் குறியீட்டு மொழி (SGML) அச்சுக் கோத்தல் மற்றும் கணினிப் பதிப்பகப் பணிகளுக்கும் மின்னணு ஆவணங்களுக்கும் பயன்படுகிறது. இது போன்ற குறியீட்டு மொழிகள் பணித்தளம் சாரா ஆவணங்களை/கோப்புகளை உருவாக்கப் பயன்படு கின்றன. பல்வேறு பயன்பாடு களுக்கிடையே கையாண்டு கொள்ளவும் வழி செய்கின்றன.

marquee : நகர் தொடர் : திரையில் இடவலமாக வலஇடமாக நகர்ந்து செல்லும் சொல் தொடர்.

maser : மாசர் : Microwave amplification by the stimulated emission of radiation என்படன் குறும் பெயர். வானொலி அலை வரிசை. வெளியீட்டை மிகைப் படுத்தக்கூடிய ஒரு சாதனம். செயற்கைக்கோள் தகவல் தொடர்பு தரை நிலையங்களில் மாசர் பெருக்குக் கருவிகள் தகவல் தொடர்புச் செயற்கைக் கோள்களிலிருந்து பெறப்பட்ட மிகவும் வலுவிழந்த சமிக்கை களை பெரிதுபடுத்த பயன் படுத்தப்படுகிறது.

mask : மூடி : 1. எந்திரச்சொல். இதில் துண்மிகள் அல்லது எண்மிகள் அல்லது எழுத்துகள், நிரல் ஒன்றைக் கட்டுப்படுத்துவதன் மூலம் தேர்ந் தெடுக்கப்பட்ட எட்டியல்கள் அல்லது துண்மிகளை அல்லது எழுத்துகளை இருத்திக் கொள்ளுதல் அல்லது நீக்குதல் ஆகிய பணிகளைச் செய்கிறது. உற்பத்தி நடைமுறையில் பயன்படும் முறைமை ஒன்றில் உள்ள இணைப்பு ஒன்றின் இன்டியோ கிராஃபிக் பிரதிநிதித்துவம்.

maskable interrupts : மூடக்கூடிய தலையீடுகள் : மென்