பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/907

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

mass storage device

906

master file


 முக ஆதரிப்புச் சேமிப்பக அமைப்பு. வழக்கமான துணை நிலை இருப்பகத்தைவிட அதிக அளவுகளில் தரவுகளை சேமிக்கும் திறன் கொண்டது.

mass storage device : பெருஞ் சேமிப்புக் கருவி : பெருமளவு தரவுகளைச் சேமிக்க, சிக்கனமான சேமிப்பகங்களை வழங்குகிற கருவி. எடுத்துக்காட்டு : வன்வட்டுகள், ஒளி நாடாக்கள், குமிழ் நினைவு பெரும் காந்த வட்டு அமைப்புகள் மற்றும் பெருமளவு சேமிப்புச் சுருணை முறைமைகள். 500 பில்லியன் எழுத்துகளுக்கு மேல் ஏற்கக்கூடியது.

master : முதன்மையாளர் : ஒன்று அல்லது மேற்பட்ட பிற சாதனங்களின் இயக்கத்தைக் கட்டுப்படுத்தும் சாதனம்.

master boot record : முதன்மை ஏற்றும் பதிவேடு : நிலை வட்டில் உள்ள ஏற்றும் பதிவேடு. பல்வேறு வட்டுப் பிரிவுகளைக் காட்டும், பிரிவினைப் பட்டியல் இதில் உள்ளது. ஒவ்வொரு பிரிவும் ஏற்றுப் பதிவேட்டுடன் துவங்குகிறது. இது துணை இயக்க அமைப்புகளை ஏற்றுவதைத் தொடங்கி வைக்கிறது.

master card : முதன்மை அட்டை : துளையிடப்பட்ட அட்டை படிவத்தில் மாஸ்டர் அட்டை.

master clear : முழுமையும் அழித்தல் : முற்றும் அழித்தல். சில கணினி முனையங்களை இயக்கி வைக்கும் சாதனம். அது சில நடைமுறைப் பதிவுகளை விலக்கி புதிய இயக்கத்துக்கு தயார் செய்யும்.

master clock : முதன்மை கடிகாரம் : கணினி ஒன்றின் அடிப்படையான நேரத் துடிப்பைக் கட்டுப்படுத்தும் சாதனம்.

master console : முதன்மை முகப்பு : கணினிக்கு ஆணையளிக்க கணினி இயக்குபவர் அல்லது அமைப்பிற்கு நிரல் தொடர் அமைப்பவர் பயன்படுத்தும் முதன்மை முகப்பு.

master copy : மூலப்படி.

master data : முதன்மைத் தரவு : அடிக்கடி மாற்றப்படும் தரவு தொகுப்பு. இது வகைப்படுத்தும் நடவடிக்கைகளுக்கான அடிப்படைத் தரவுகளை வழங்குகிறது.

master file : முதன்மைக் கோப்பு ; தலைமைக் கோப்பு : ஒப்பு நோக்கில் நிரந்தரமான தரவுகளைக் கொண்ட கோப்பு. உசாவலுக்கும் உரிய ஆதாரமாக உள்ளது. பொதுவாக குறிப்