பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/908

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

master file maintenance

907

master/slave computer system




பிட்ட கால இடைவெளியில் காலத்துக்கு ஏற்ற வகையில் மேம்படுத்தப்படுகிறது.

master file maintenance : முதன்மைக் கோப்பு பராமரிப்பு  : காலத்துக்கேற்ற வகையில் மேம்படுத்துதல், மாற்றுதல் அல்லது முதன்மைக் கோப்புகளை திருத்தி அமைத்தல்.

master key : முதன்மை விசை ; முதன்மைத் திறவி : மென்பொருள் அல்லது தரவு பாதுகாப்புக்கான வழங்கன் (server) அடிப்படையிலான ஆக்கப் பொருள்கூறு (component). சில கணினி அமைப்புகளில் தரவு அல்லது பயன்பாடுகள் ஒரு வழங்கன் கணினியில் சேமிக்கப்பட்டிருக்கும். கிளையன் (Client) கணினியில் அவற்றைப் பதிவிறக்கிப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஒரு கிளையன் கணினி தரவு கேட்டு கோரிக்கை அனுப்பும்போது தொடர்வுத் திறவியை (session key) அனுப்பி வைக்கும். தொடர்வுத் திறவி, முதன்மைத் திறவியுடன் பொருந்தியிருப்பின், கிளையன் கேட்ட தரவுப் பொதியை வழங்கன் அனுப்பி வைக்கும்.

master link : முதன்மை இணைப்பு : மெக்டொனால்டு டக்ளஸ் உருவாக்கிய விநியோகிக்கப்பட்ட எண் முறைக் கட்டுப்பாட்டு அமைப்பு. துளையிட்ட அட்டையின் தொடர்பான பிரச்சினைகள் இன்றி வடிவமைப்பிலிருந்து பொருத்துவதற்கு நேரடியாக மின்னணு தரவுகளை வழங்குகிறது.

master menu : முதன்மைப் பட்டியல் : சிறு அல்லது நுண் கணினிகளில் பயன்படுத்தப்படும் எதிர்வினையாற்றும் செயலாக்க அமைப்பு. காட்சித் திரையில் பட்டியலைக் காட்டும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது. பல மாற்று வழமைகளில் விரும்பப்படும் நிரலைத் தேர்ந்தெடுக்க இது உதவுகிறது.

master record : முதன்மைப் பதிவேடு : வாடிக்கையாளர் பணியாளர் அல்லது விற்பனையாளர் போன்ற தனிப்பட்ட தலைப்புகளுக்கான தரவுகளின் தொகுதி.

master/slave arrangement : தலைமை/அடிமை அமைப்பு முறை; தலைவன்/பணியாள் அமைப்பு முறை : (எ-டு) கணினியானது ஏனைய புறச் சாதனங்களைக் கட்டுப்படுத்தும் முறை.

master/slave computer system : தலைமை/அடிமை கணினி முறைமை : ஒரு தலைமைக்