பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

arithmetic exception

90

arthmetic shift


முறை தரவுச் சரங்களை 0 முதல் 9 வரை உள்ள தனி பதின்ம எண்ணாக மாற்றுவது.

arithmetic exception : எண் கணித விதிவிலக்கு

arithmetic expression : கணக்கீட்டுத் தொடர்; எண் கணிதக் கோவை : ஒன்று அல்லது கூடுதலான எண்கள், மாறிகள், செயல்கள், குறியீடுகள் அல்லது இவை இணைந்த கோவை. கணக்கீட்டின் விளைவாக ஒரு தனி மதிப்பைக் குறிப்பிடுவது.

arithmetic, fixed point : நிலைப் புள்ளிக் கணக்கீடு

arithmetic, floating decimal : மிதவைப் புள்ளிக் கணக்கீடு

arithmetic instruction : கணித ஆனண : கணித இயக்கத்தைச் செய்யுமாறு கணினிக்குச் சொல்கிறது.

arithmetic-logic unit : கணிதத் தருக்ககம் : மையச் செயலாக்கத் தின் ஒர் அங்கம். அங்கு கணித மற்றும் தருக்கவியல் நடவடிக் கைகள் நிறைவேற்றப்படுகின்றன.

arithmetic operation : கணித வியல் செயல்பாடு : எண் கணித வினை : எண்ணியல் அளவுகளின் பல்வேறு நடவடிக்கைகள். இவற்றில் அடிப்படை நடவடிக்கைகளான கூட்டல் அல்லது கழித்தல், பெருக்கல், வகுத்தல், தொகுத்தல் கூறுபடுத்துதல் மற்றும் வேர்களை பிரித்தெடுத்தல் ஆகியவையும் அடங்கும்.

arithmetic operation, binary : இருமக் கணிதச் செயல்பாடு

arithmetic operator : கணிதச் செயற்குறி : ஒரு கணக்கீட்டைச் செய்ய கணினிக்கு கூறும் குறியீடு. கூட்டல், கழித்தல், பெருக் வகுத்தல், தொகுத்தல் போன்ற செயல்களைக் குறிப்பிடும் செயற்குறிகள்.

arithmetic overflow : கணித மிகைவழிவு : வரையறுக்கப் பட்ட வரம்புக்கு அதிகமாகப் பெறப்படும் மதிப்பு. ஒரு நான்கு இலக்க எண் வகை மாறியில் ஐந்து இலக்க மதிப்பை இருத்த முனைதல்.

arithmetic register : கணிதப் பதிவகம் : கணித மற்றும் அளவை இயக்கங்களைச் செய்வதற்கென்றே ஒதுக்கப்பட்ட பதிவகம்.

arithmetic shift : கணிதவியல் பெயர்ச்சி : ஒர் எண்ணிக்கையினை அடிப்படை எண் ஒன்றினால் பெருக்கல் அல்லது வகுத்தல். எடுத்துக்காட்டு 13ஐ 10ஆல் இருமுறை பெருக்கியதால்