பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/910

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

mathematical logic

909

matrix data


 mathematical logic : கணித அளவையியல் : மொழி மற்றும் அதன் வகைப்படுத்தும் நடை முறைகளைப் பிரதிநிதித்துவப்படுத்த கணிதவியல் குறியீடுகளைப் பயன்படுத்துதல். ஒரு அறிவிக்கை அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட அறிவிக்கை வரிசைகள் உண்மையானவையா? பொய்யானவையா? என்பதைத் தீர்மானிக்க கணித விதிகளுக்கு இயைந்த வகையில் இந்தக் குறியீடுகள் கையாளப்படுகின்றன.

mathematical model : கணிதவியல் மாதிரி ; கணிதவியல் படிமம் : ஒரு குழுக் கணித வெளியீடுகள். இவை ஒரு முறைமை நடவடிக்கையைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன அல்லது ஒரு கருவியின் செயல்பாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன.

mathematical symbols : கணிதக் குறியீடுகள்  : சூத்திரங்கள், சமன்பாடுகள் மற்றும் பட்டியல் தொகுப்புகளில் பயன்படுத்தப்படும் குறியீடுகள்.

mathematics : கணிதம் : பொருள்களுக்கிடையிலான அல்லது அளவுகளுக்கிடையிலான உறவுகள் பற்றிய ஆய்வு. இதன் மூலம் தருக்க முறை வழிகளைப் பயன்படுத்தி சில உண்மைகளை நிரூபிக்க அல்லது பெற இயலும்.

matrix : அணி; அடித்தளப் பரப்பு : தொடர்புள்ள உருப்படிகளை (எண்களாக இருக்கலாம், விரிதாள் கலங்களாக இருக்கலாம், மின்சுற்று உறுப்புகளாக இருக்கலாம்) கிடக்கைகளாகவும் நெடுக்கைகளாகவும் (Rows and Columns) அடுக்கி வைக்கும் ஓர் ஒழுங்கமைப்பு. செவ்வக வடிவிலான எண் தொகுதிகளைக் கையாளக் கணிதத்தில் அணிகள் பயன்படுத்தப்படுகின் கணிப் பணி (Computing) யிலும் கணினிப் பயன்பாடுகளிலும் (Computer Applications) தரவுவை அட்டவணை வடிவில் கையாள அணிகள் பயன்படுகின்றன. கணினி வன்பொருள்களிலும் அணிகளின் பயன்பாடு உண்டு. திரைக்காட்சியில் எழுத்துகள் படப் புள்ளிகளின் (pixels) அணியாகவே காட்சியளிக்கின்றன. அச்சுப்பொறியில் எழுத்துகள் புள்ளிகளின் அணியாகவே அச்சிடப்படுகின்றன. மின்னணுவியலில் டயோடு, டிரான்சிஸ்டர்களின் அணி அடிப்படையில் தருக்க மின்சுற்றுகளின் பிணைய அமைப்பு உருவாக்கப்படுகிறது. தகவலின் குறியாக்க (Encoding), குறி விலக்கப் (Decoding) பணிகளுக்கு இவை பயன்படுகின்றன.

matrix data : அணித் தரவு.