பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/911

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

matrix notation

910

Mauchly, john


matrix notation : அடித்தளப் பரப்புக் குறியீடு : 1858இல் ஆர்தர் கெய்லி என்னும் ஆங்கிலேய கணிதவியலாளரால் அறிமுகப்படுத்தப்பட்டது. அவர் ஒரு குறுங்குறியீட்டு முறையை அதாவது ax என்பது b-க்குச் சமம் எனும் நீள் சமன்பாட்டு வெளியீட்டு முறைமைகளைப் பயன்படுத்தினார்.

matrix printer : புள்ளியணி அச்சுப்பொறி : அடித்தளப்பரப்பு அச்சிடு கருவி : எழுத்து அச்சிடு கருவி. இது புள்ளி அடித்தளப் பரப்பை அச்சிடும் எழுத்தின் வடிவத்தைப் பெறப் பயன்படுத்தினார்.

mature system : முதிர்ந்த முறைமை  : என்னென்ன பணிகளைச் செய்ய வடிவமைக்கப் பட்டதோ அந்தப் பணிகள் அனைத்தையும் நிறை வேற்றக் கூடிய, முழுமையாக இயங்கக்கூடிய முறைமை.

MAU : மாவ் : Multi-station Access Unit என்பதன் சுருக்கம். குறும்பரப்பு இணையத்தில் அடையாள வளையத்தின் மையஅச்சு.

Mauchly, John 1907-1980 : மக்லி, ஜான் : 1907-1980 : இனியாக் கணினியின் கூட்டுக் கண்டுபிடிப்பாளர். இதுவே மின்னணுவியல் கணினிகளில் பெரியதாகும். பென்சில்வேனி யாவில் உள்ள உர்சினஸ் கல்லூரியின் இயற்பியல் துறைத் தலைவராக 1930ஆம் ஆண்டில் கணினி மற்றும் மின்னணுவியல் தொடர்பான சோதனை களை மக்லீ துவக்கினார். பள்ளியில் எட்டாண்டு கள் இருந்த காலத்தில் பருவ நிலை ஆய்வுத் திட்டம் ஒன்றில் அவர் பணியாற்றினார். சிக்கலான சுற்றுச் சூழல் தொடர்பான கணக்கு கிளைச் செய்ய விரைவாகச் செயல்படக்கூடிய மின்னணுவியல் கருவி ஒன்று அவசியம் என்ற முடிவுக்கு வந்தார். 1941இல் அவர் பென்சில் வேனியா பல்கலைக்கழகத்தில் உள்ள மின் பொறியியல் பள்ளியில் சேர்ந்தார். அங்கு 1943ஆம் ஆண்டின் துவக்கத்தில் ஜே. பிரெஸ் பெர் ஈக்கெர்ட்டைச் சந்தித்தார். இருவரும் சேர்ந்து இராணுவ ஆயுதப் படைப் பிரிவுக்கு மின்னணுவி யல் கணினி ஒன்றைத் தயாரிப்பதற்கான திட்டத்தைத் தயாரித்தார். இராணுவத்தின் ஆயுதப் படைப் பிரிவு அவருக்கு அந்த எந்திரத்தைத் தயாரிப்பதற்கான ஒப்பந்தத்தை வழங்கியது. இராணுவத்துக்கு இரண்டாவது உலகப் போருக்காக புதிதாக உருவாக்கப்பட்ட பீரங்கிகளின் இலக்கு களை நிர்ணயிப்பதற்