பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/912

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Mauchly, john

911

Maximize button


கான கணிதப் பட்டியல்களைத் தயாரிக்க வேண்டியிருந்தது. இத்தகைய பட்டியல்களை மூர் பள்ளி ஏற்கனவே பயன்படுத்தி வந்தது. 1943-க்கும் 1946-க்கும் இடைப்பட்ட காலத்தில் இவை மிகவும் மெதுவாக இயங்கின. ஈக்கெர்ட்டும், மக்லீயும் மின் னணுவியல் எண் ஒருங்கிணைப்பி மற்றும் கணினி ஒன்றை உருவாக்கினார்கள். எதிர்காலத்தில் பல கணினி வடிவமைப்புகளை உருவாக்குவதற்கான முன்னோடியாக இது அமைந்தது. ஈனியாக் உண்மையிலேயே ஒரு பெரிய ராட்சதன் ஆகும். அது 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெற்றிடக் குழாய்களைக் கொண்டது. அதன் எடை 30 டன்கள். அது மூன்று படுக்கையறைகளைக் கொண்ட ஒரு வீட்டின் பரப்பளவைக் கொண்ட அறையில் அமைக்கப் பட்டிருந்தது. ஈனியாக் உருவானதைத் தொடர்ந்து ஈக்கெர்ட் டும் மக்கிலீயும் தங்கள் சொந்தக் கம்பெனியை நிறுவினார்கள். அவர்கள் பினாக் என்ற பெயரில் தங்கள் இரும எண் தானியங்கிக் கணினியை அமைத்தார்கள். அது சோதனை முயற்சியாக அமைந்தது. பொது நோக்கங்களுக் கான உலகின் முதலாவது வணிகக் கணினி யுனிவாக், அமெரிக்காவின் மக்கள் தொகைக் கணக்கெடுப் புக் கழகத்தில் நிறுவப்பட்டது. ஈக்கெர்ட்டும் மக்லீயும் துவக்கிய நிறுவனம் இப்பொழுது ஸ்பெரி கார்ப்பரேஷனின் ஒரு அங்கமாக உள்ளது. இந்நிறுவனம் உலகின் மிகப் பெரிய கணினி சாதனங்களைத் தயாரிக்கும் நிறுவனமாக உள்ளது.

. ma. us : . எம். ஏ. யு. எஸ் : ஓர் இணைய தள முகவரி அமெரிக்க நாட்டு மாசாசூஸ்ட்ஸ் மாநிலத் தைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

maximinicomputer : பெரிய குறுங்கணினி : 16 துணுக்குச் சொற்களைப் பயன்படுத்தும் பெரிய குறுங்கணினி, Minimini computer, Midimini computer and Superminicomputer ஆகியவற்றுக்கு எதிரானது.

maximize : பெரிதாக்கு : உச்சப்படுத்து : வரைகலைப் பயனாளர் இடைமுகத்தில் (GUI) ஒரு சாளரத்தை விரிவாக்கி தாய்ச் சாளரம்அல்லது கணினித் திரை முழுமையும் பரவும் வண்ணம் செய்தல்.

maximize and minimize buttons : பெரிது. சிறிதாக்கும் பொத்தான்கள்.

maximize button : பெரிதாக்கு பொத்தான் : விண்டோஸ் 3. x,