பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/914

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

MCGA

913

. md. us


கணினி எனும் கருதுகோளை எம்ஐடியில் பணிபுரியும் பொழுது உருவாக்கியவர். செயற்கைப் புலனாய்வு எனும் சொற்றொடரை முதலில் உரு வாக்கியவர். செயற்கைப் புலனாய்வு தொடர்பான தனது பணிகளுக்காக நன்கு அறியப்பட்டவர்.

MCGA : எம்சிஜிஏ : பல்வண்ண வரைகலைக் கோவை எனப் பொருள்படும் Multicolour Graphics Array glassip என்ற தொடரின் தலைப் பெழுத்துக் குறும்பெயர். கணினித் திரைக் காட்சிக்கான மின்சுற்று அட்டை.

MCI : எம்சிஐ : 1. ஊடகக் கட்டுப்பாட்டு இடைமுகம் எனப்பொருள்படும் Media Control Interface என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். விண்டோஸ் இயக்க முறைமையின் பயன்பாட்டு நிரலாக்க இடைமுகம் (Windows AP). பல்லூடகச் சாதனங்களை நிரல் மூலமாகக் கட்டுப்படுத்த உதவுகிறது. 2. தொலைதுாரத் தொலைபேசி சேவை வழங்கும் ஒரு மிகப்பெரும் நிறுவனம். Microwave Communications Inc., என்பது அந்நிறுவனப் பெயர்.

md : எம்டி : ஓர் இணைய தள முகவரி மால்டோவாக் குடியரசைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப் பெயர்.

MDA : எம்டிஏ : ஒற்றைநிறத் திரைக்காட்சித் தகவி என்று பொருள்படும் Monochrom Display Adapter என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும் பெயர். 1981-ல் ஐபிஎம் பீசிகளில் அறிமுகப் படுத்தப்பட்ட ஒளிக்காட்சித் தகவி. எம்டிஏயில் ஒரேயொரு ஒளிக்காட்சிப் பாங்கு மட்டுமே உண்டு. 25 வரிகள் 80 எழுத்துகள். ஒவ்வொரு எழுத்து களுக்கும் அடிக்கோடு உண்டு; மின்னுதல் மற்றும் ஒளிர்தல் (Bright) பண்புகளும் உண்டு.

MDI : எம்டிஐ : பல் ஆவண இடைமுகம் என்று பொருள்படும் (Multi Document Interface) என்ற தொடரின் தலைப் பெழுத்து குறும்பெயர். சில பயன்பாட்டு மென்பொருள்களில் இருக்கும் பயனாளர் இடைமுகம். ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட ஆவணங்களைத் திறக்க உதவுகிறது. மைக்ரோசாஃப்ட் வேர்டு, எக்செல் தொகுப்புகளில் உள்ளது. நோட்பேடு, வேர்ட் பேடு ஆகியவற்றில் கிடையாது.

. md. us : . எம். டி. யு. எஸ் : ஓர் இணைய தள முகவரி அமெரிக்க நாட்டின் மேரிலாந்து