பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/918

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

megapel display

917

memory board


 megapel display : மெகாபௌல் காட்சி : கணினி வரைகலையில் ஒரு பத்து இலட்சம் அல்லது மேற்பட்ட படப்புள்ளிகளைக் கையாளும் காட்சி அமைப்பு. ஒரு முழு திரைக்காட்சியில் ஒரு பத்து இலட்சம் படப்புள்ளிகள் வர வேண்டு மென்றால் 1, 000 வரிகளில் ஒவ்வொன்றிலும் 1, 000 புள்ளிகள் இருக்கும்.

member : உறுப்பு : உறுப்பினர் : பொருள்நோக்கு நிரலாக்கத்தில் ஓர் இனக்குழுவில் (class) வரையறுக்கப்படும் ஒரு மாறிலி (variable) அல்லது ஒரு வழி முறை (mothod).

membrane keyboard : ஜவ்வு விசைப்பலகை : இரண்டு மெல்லிய பிளாஸ்டிக் தாள்களினால் அமைக்கப்பட்டது. மின்சாரத்தை கடத்தும் மசிப்பூச்சு உடையது. பல குறைந்த விலையுடைய நுண் கணினிகளில் பயன்படுத்தப்படும் சிக்கனமான சமதள விசைப் பலகை.

memo field : குறிப்புப் புலம் : செய்தியில் மாறும் அளவினைக் கொண்டிருக்கும் தரவுப் புலம். செய்தியை இணைகோப்பில் சேமிக்கலாம். ஆனால், அது தரவுப் பதிவேட்டில் ஒரு பகுதி என்பது போல நடத்தப்படும்.

memory நினைவகம் : நினைவுப்பதிப்பி : ஏராளமான தரவுகளை சேமிக்கும் திறன் கொண்ட கணினியின் சேமிப்பு வசதிகள்.

memory access : நினைவு அணுகல்.

memory addresses : பதிப்பி முகவரிகள்.

memory allocation : நினைவக ஒதுக்கீடு.

memory, associate : சார்பு நினைவகம்.

memory bank : நினைவக வங்கி : தரவுகளை வைத்திருக்கும் கணினி அமைப்பை பொதுவாகக் குறிப்பிடுகிறது.

memory based : நினைவகம் சார்ந்த : செயலாக்கம் செய்வதற்காக நினைவகத்தில் எல்லா தரவுகளையும் வைத்துக் கொள்ளும் நிரல் தொடர். ஏறக்குறைய எல்லா விரிதாள்களும் நினை வகம் சார்ந்தவை. விரிதாளில் ஒரு முனையில் செய்யப்படும் மாற்றம் உடனடியாக அடுத்த முனை யில் பிரதிபலிக்கும். இதனால் அவற்றின் இயக்கம் கணிசமாக விரைவடையும்.

memory board : நினைவுப் பலகை : கணினி முறையுடன் ராமை இணைக்கும் விரிவுப் பலகை. கூடுதல் தகவலைச் சேமிக்கவும் பயன்படுத்தவும் இதனால் இயல்கிறது.