பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

arithmetic statement

91

ARPANET



கிடைப்பது 1, 300 ஆகும். இதில் 13 என்ற எண் இரு இடங்களில் இடப்புறப் பெயர்ச்சி அடைகிறது.

arithmetic statement : கணக்கீட்டுக் கூற்று.

arithmetic underflow : குறைப் பொழிவு : சரியாகக் கூறமுடியாத அளவுக்குச் சிறிய எண்ணாக வரும் கணக்கீடு.

arithmetic unit : கணக்கம் : கணக்கிடும் பகுதி.

arm access : அணு குகை

. army. mil : ஆர்மி. மில் : அமெரிக்க நாட்டு இராணுவத்தைச் சுட்டும் இணைய தள முகவரி. இணைய தளங்களை அவற்றின் உள்ளடக்கங்களுக்கேற்ப com. gov. edu. org. mil. net. int. ஆகிய பெரும் பிரிவு களில் அடக்குகின்றனர். அமெரிக்க இராணுவத் தள முகவரி . mil என்ற பெரும் பிரிவில் அடங்குகிறது.

ARP : ஏ. ஆர். பீ : முகவரி கண்டறி நெறிமுறை என்று பொருள்படும் Address Resolution Protocol என்பதன் தலைப்பெழுத்துச் சுருக்கம். கணினிப் பிணையங்களுக்கிடையே தகவல் தொடர்புக்கான டி. சிபி/ஐபி (TCP/ IP) நெறிமுறையின் ஒரு வடிவம். ஒரு குறும் பரப்பு பிணையம்இணையத்தில் தொடர்புகொள்ளும்போது ஐபி முகவரி (தருக்க முகவரி) யை மட்டுமே அறிய முடியும். அப்பினையத்திலுள்ள ஒரு கணினியின் மெய்யான வன்பொருள் (ஈதர் நெட்) முகவரியை அறிந்துகொள்ள ஏஆர்பி நெறிமுறை பயன்படுகிறது. இணையத்தின் வழியாக ஒர் ஏ. ஆர். பீ கோரிக்கை அனுப்பி வைக்கப்படும்போது, குறிப்பிட்ட ஐபி முகவரி கொண்ட கணுக் கணினி தன்னுடைய வன் பொருள் முகவரியோடு பதில் அனுப்பும். வன்பொருள் முகவரி கண்டறிதலைப் பொதுவாகக் குறித்தபோதும் எதிர்மறைப்பணியான ஆர்ஏஆர்பீ (Reversed ARP) சேர்த்தே குறிக்கிறது.

ARPANET : 'அர்ப்பானெட்' மேம்பட்ட ஆய்வுத்திட்ட முகமைப் பிணையம்' எனப் பொருள்படும்

Advanced Research Projects Agency Network என்பதன் குறும் பெயர். இது பாதுகாப்புத் துறை இடங்கள், ஆய்வு மையங்கள் மற்றும் கணினி அறிவுக்கூடங் களை இணைக்கிறது. இதன் நோக்கம் கணினி விவரங்களைப் பகிர்ந்து கொள்ளுதல், மிகவும் நம்பிக்கையான, சிக்கனமான கணினித் தகவல் தொடர்பை உருவாக்குதல்.