பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/920

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

memory dump

919

memory management unit


memory dump : நினைவகச் சேமிப்பு;நினைவகத் திணிப்பு;நினைவுக் கொட்டல்.

memory, external : புற நினைவகம்.

memory fill : நினைவக நிரப்பி : ஒரு குறிப்பிட்ட மதிப்புக்கு நினைவகத்தின் ஒரு கட்டத்தில் தரவுகளைப் பொருத்துதல்.

memory interleaving : நினைவக இடைவெளியேற்றம் : நினைவக வேகத்தை அதிகரிக்கும் தொழில்நுட்பத்தின் ஒரு வகை. சான்றாக, ஒற்றைப்படை மற்றும் இரட்டைப்படை முகவரிகளுக்கு தனித்தனி நினைவக வங்கியை அமைப்பதன் மூலம் நடப்பு எண்மியைப் புதுப்பிக்கும் வேளையில் நினைவகத்தின் அடுத்த எண்மியை அணுகலாம்.

memory, internal : அக நினைவகம்.

memory, magnetic : காந்த நினைவகம்.

memory main : முதன்மை நினைவகம்.

memory management : நினைவுப் பராமரிப்பு : நினைவு ஆதாரங்களை மிகவும் திறனுடன் கட்டுப்படுத்துகிற அல்லது ஒதுக்கீடு செய்கிற உத்தி.

memory management programme : நினைவக மேலாண்மை நிரல் : 1. தரவு மற்றும் நிரல் ஆணைகளை முறைமை நினைவகத்தில் இருத்தி வைத்தல், அவற்றின் பயன்பாட்டை கண்காணித்தல், விடுவிக்கப்படும் நினைவகப் பகுதியை மறுஒதுக்கீடு செய்தல் போன்ற பணிகளைச் செய்யும் ஒரு நிரல். 2. நிலைவட்டின் (Hard Disk) ஒரு பகுதியை ரோம் நினைவகத்தின் நீட்டிப்பாய் பயன்படுத்திக் கொள்ளும் ஒரு நிரல்.

memory management unit : நினைவக மேலாண்மையகம் : மெய்நிகர் நினைவக முகவரிகளை (Virtual Memory Address) மெய்யான நினைவக முகவரிகளுக்குப் பொருத்துகின்ற திறன்பெற்ற வன்பொருள். 68020 செயலியை அடிப்படையாகக் கொண்ட கணினிகளில், செயலியும் நினைவக மேலாண்மையகமும் தனித்தனியானவை. ஆனால் இன்றைய நவீனக் கணினிகளில் நினைவக மேலாண்மையகம் மையச் செயலகத்தில் உள்ளிணைக்கப் பட்டிருக்கும். இன்னும் சில கணினிகளில் இவை நுண் செயலிக்கும் நினைவகத்திற்கும் இடையே பாலமாகச் செயல்