பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/921

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

memory map

920

memory port


படும். இந்த வகை நினைவக மேலாண்மையகங்கள் முகவரி ஒன்று சேர்ப்புப் பணிக்குக் காரணமாயிருக்கின்றன. 'டி'ரோம்களில் புதுப்பிப்புச் சுழற்சிகளுக்குக் காரணமாயுள்ளன.

memory map : நினௌவகப் படம் : தரவு சேமிப்பகத்தில் உள்ள தோற்ற உரு வேறு இடத்தில் தோன்றுதல். எடுத்துக்காட்டாக நினைவகத்தில் உள்ள ஒவ்வொரு இடத்துக்கும் பொருத்தமான எழுத்து உரு வெளிப்படு திரையில் தோன்றுதல்.

memory mapped I/O : நினைவகப் பின்னணியிலான உ|வெ : வெளிப்புறச் சாதனம். இதன் உள்ளீடு அல்லது வெளியீட்டின் ஒவ்வொரு உறுப்புக்கும் ஏற்ற நினைவக இருப்பிடங்கள். சான்றாக, நினைவகப் பின்னணியிலான காட்சியமைப்பில் ஒவ்வொரு படப்புள்ளி அல்லது எழுத்தும் நினைவகத்தில் அதற்குரிய எண்மிகளில் இருந்து தரவுகளைப் பெறுகின்றன. மென்பொருளால் நினைவகம் புதுப்பிக்கப்பட்டவுடன். புதிய தரவுவை திரை காட்டுகிறது.

memory mapping : நினைவகம் அமைத்தல் : முன் வரையறை செய்யப்பட்ட அல்கோரிதம்களுக்கு ஏற்றவாறு மாயமுகவரியை உண்மையான முகவரியாக மாற்றும் முறை.

memory model : நினைவக மாதிரியம் : ஒரு கணினி நிரலில் உள்ள தரவுகளையும் குறி முறைகளையும் (கட்டளை களையும்) நினைவகத்தில் ஏற்றுவது தொடர்பான ஒர் அணுகுமுறை. நினைவகத்தில் தகவலுக்கு எவ்வளவு இடம், கட்டளைகளுக்கு எவ்வளவு இடம் என்பதை நினைவக மாதிரியம்தான் தீர்மானிக்கிறது. பொதுவாகத் தட்டை நினைவகப் பரப்பினைக் கொண்டுள்ள பல கணினிகள் ஒற்றை நினைவக மாதிரியத் தையே ஏற்கின்றன. துண்டம் துண்டமான நினைவகப் பரப்பினைக் கொண்டுள்ள கணினிகள் பெரும்பாலும் பல்வகை நினைவக மாதிரியங் களுக்கு இடம் தருகின்றன.

memory module : நினைவகக் கூறு (மாடுல்) : தலைமை நினைவகத்தின் 4 கிலோ எண்மி அல்லது மேற்பட்ட கூறுகளைக் கொண்ட தனிப்பட்ட மின் சுற்று அட்டை.

memory port : நினைவக இணைப்பி : தலைமை நினைவகத்திற்கும் மையச் செயலகத்திற் குமான இணைப்பின் ஆரம்ப நிலை.