பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/922

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

memory power

921

menu


memory power : நினைவாற்றல்.

memory protection : நினைவகப் பாதுகாப்பு : ஒரு நிரல் தொடரானது தவறுதலாக வேறொரு இயங்கும் நிரல் தொடருடன் மோதுவதைத் தடுக்கும் தொழில்நுட்பம். நிரல் தொடரைச் சுற்றி ஒரு பாதுகாப்பு எல்லைக்கோடு உருவாக்கப்படுகிறது. நிரல் தொடருக்குள்ளிருக்கும் நிரல்கள் அதன் எல்லைக்கு வெளியே இருக்கும் நிரல்களைத் தொட தடை செய்யப் படுகிறது.

memory, random access : குறிப்பிலா அணுகு நினைவகம்.

memory resident : நினைவகத்தில் தங்கியுள்ள : எப்போதும் நினைவகத் தில் உள்ள நிரல் தொடர்.

memory resident package : நினைவகத்தில் தங்கியிருக்கும் பொட்டலம் : கணினியின் அடிப்படை சேமிப்பகத்தில் ஏற்றப்படும் மென்பொருள். நேர மெடுக்கும் அலுவலகப் பணிகளைச் செய்வதற்கு அழைக்கப் படும்வரை அது காத்திருக்கிறது.

memory size : நினைவக அளவு : ஒரு கணினியின் நினைவகக் கொள்திறன். பெரும்பாலும் மெகா பைட்டுகளில் அளவிடப்படும்.

memory slot : நினைவக செருகுவாய்;நினைவகப் பொருத்துமிடம்.

memory sniffing : நுகர்வு நினைவகம்;நினைவகச் சோதனைகள் : வகைப்படுத்தும் பணியின்போது சேமிப்பகத்தை தொடர்ந்து சோதனையிடல்.

memory space : நினைவக இடம் : மையச் செயலகம் அணுகக்கூடிய நினைவக முகவரிகளின் வரிசை. 8088 சிப்புவின் முகவரியிடம் ஏறக் குறைய பத்து இலட்சம் எண்மிகளாகும்.

memory typewriter : நினைவகத் தட்டச்சுப் பொறி : அதன் நினைவகத்தில் சில பக்கங்கள் அளவு செய்திகளை வைத்துக் கொண்டு ஒரளவான சொல் செயலாக்க பணிகளையும் செய்யும் தட்டச்சு. ஒன்று அல்லது இரண்டு வரி திரையை வைத்துக் கொண்டு தொகுப்பது தொல்லை தருவதாகும்.

memory unit : நினைவக அலகு.

memory, volatile : நிலையா நினைவகம்.

memotype field : குறிப்புரைத் தரவுப் புலம்.

menu : பட்டி பட்டியல் : ஒரு பயனாளர் தாம் விரும்புகின்ற நடவடிக்

கையை மேற்கொள்ள