பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/925

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

message

924

message security protocol


மதிக்கப்படுகின்றன. Ring network-க்கு எதிரானது.

message : செய்தி;தரவு : ஒரு குழு என்கிற வகையில் பொருளைத் தருகிற எழுத்துகள். இவை ஒரு குழு என்கிற வகையிலேயே கையாளப்படுகின்றன.

message box : தரவுப் பெட்டி;செய்திப் பெட்டி.

message format : செய்தி வடிவமைப்பு : தரவுவின் பகுதிகளை அதாவது தரவுத் தலைப்பு, முகவரி, உரைப் பகுதி மற்றும் தரவுவின் முடிவு ஆகியவற்றை வகைப்படுத்துதலுக்கான விதிகள்.

message header : செய்தி தலைப்பு : தரவு ஒன்றின் தலைப்புப் பகுதி. அது தரவுத் தொடர்பான செய்தியை அதாவது தரவு போய்ச் சேர வேண்டிய இடம் முன்னுரிமை மற்றும் தரவுவின் வகைகள் பற்றிக் கூறுகிறது.

message of the day : இன்றையச் செய்தி : ஒரு பிணையத்தில் அல்லது பல்பயனாளர் கணினிகளில் அல்லது பிற பகிர்வு முறைமைகளில் அனைத்துப் பயனாளர்களுக்கும் அறிவிக்கப்படும் தினசரிச் செய்தியறிக்கை. பெரும் பாலானவற்றில், பயனாளர் கணினி அமைப்பிற்குள் நுழையும்போதே இச்செய்தி காட்டப்பட்டுவிடும்.

message panes : செய்திப் பலகங்கள்.

message queuing : செய்திப வரிசைப்படுத்துதல் : தரவுத் தொடர்பு முறைமை ஒன்றில் தரவுகளைக் கையாளுவதைக் கட்டுப்படுத்தும் உத்தி. இது கணினி ஒன்றினால் அவற்றை ஏற்கச் செய்கிறது. அவை வகைப்படுத்தப்படும்வரை சேமிக்கப்படுகின்றன அல்லது மற்றொரு வழியில் அனுப்பப்படுகின்றன.

message reflection : செய்திப பிரதிபலிப்பு : பொருள்நோக்கு நிரலாக்கச் சூழலில், குறிப்பாக விசுவல் சி++, ஒஎல்இ, ஆக்டிவ்எக்ஸ் போன்றவற்றில் ஒரு கட்டுப்பாடு தன்னுடைய சொந்த செய்தியையே கையாள வழி செய்யும் ஒரு செயல்கூறு.

message retrieval : செய்தி மீண்டும் பெறுதல் : தகவல் முறைமை ஒன்றில் சேர்க்கப் பட்ட தகவலை சில நேரத்துக்குப் பிறகு மீண்டும் பெறும் திறன்.

message security protocol : செய்திப் பாதுகாப்புநெறிமுறை :

இணையத்தில் பரிமாறப்படும் செய்திகளுக்கான ஒரு நெறி