பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/926

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

message switching

925

meta content format


முறை. பாதுகாப்புக் கருதி மறையாக்கம் (encryption) மற்றும் சரிபார்ப்பு (verification) போன்ற உத்திகளைக் கையாளும் நெறிமுறை. ஒரு மின்னஞ்சலை ஏற்கவோ புறக்கணிக்கவோ வழங்கன் கணினியில் அனுமதி பெற வேண்டும் என்பதுபோன்ற பாதுகாப்பு நடைமுறைகளை மேற்கொள்ள இந்நெறிமுறை வழி செய்கிறது.

message switching : செய்தி பணிக் குமிழ் : தரவு ஒன்றைப் பெறும் உத்தி. சரியான வெளிச் செல் இணைப்பும் நிலையமும் கிடைக்கும் வரை அதனைச் சேமித்தல். பின்னர் அவற்றை இலக்குக் கணினிகளுக்கு மீண்டும் அனுப்புதல். இக்கணினிகள் பணிக்குமிழின் வேலைகளைச் செய்கின்றன.

message switching centre : செய்தி பணிக்குமிழ் மையம் : செய்திகளில் அடங்கியுள்ள செய்திகளுக்கேற்ப செய்திகளை அனுப்பும் மையம்.

message transfer agent : செய்திப் பரிமாற்று முகவர்.

messaging : செய்தியனுப்பல் : கணினி மற்றும் செய்தி தொடர்புக் கருவிகள் வழியாக மின்னஞ்சல், குரலஞ்சல் அல்லது தொலைநகல் மூலமாக ஒருவர் இன்னொருவருக்கு தகவல் அனுப்பும் முறை.

messaging application : செய்தியனுப்பு பயன்பாடு : பயனாளர்கள் தமக்குள் செய்திகளை (மின்னஞ்சல் அல்லது தொலை நகல்) பரிமாறிக் கொள்ளப் பயன்படும் ஒரு மென்பொருள்.

messaging client : செய்தியனுப்பு கிளையன் : மின்னஞ்சல், தொலை நகல் வழியாக பயனாளர் ஒருவர் செய்திகளை அனுப்பிவைக்க உதவும் ஒரு பயன்பாட்டு நிரல். தொலை தூரத்தில் இயங்கும் வழங்கன் கணினி இதற்காகப் பயன்படுத்திக் கொள்ளப்படும்.

meta-assembler : உயர் சேர்ப்பி;உயர்மட்ட பொறி மொழி : புரிந்து கொள்ள வேண்டிய சேர்ப்பி மொழியின் வர்ணனையை ஏற்றுக் கொள்கின்ற சேர்ப்பி.

meta character : புரவெழுத்து : நிரல் தொகுப்பு மொழி முறைமைகளில், இந்த எழுத்துகள், அவை இணைந்துள்ள எழுத்துகள் விஷயத்தில் சில கட்டுப் படுத்தும் பங்கு வகிக்கின்றன.

meta content format : மீ உள்ளடக்க வடிவம் : ஒரு வலைப் பக்கம் ஒரு கோப்புத் தொகுதி,