பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/928

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

meta operating system

927

MFT


பட்டுள்ளது. 2. திறன் கருவியில் அரைக் கடத்தியில் உள்ள ஒரு தகடு அலுமினியத்தால் ஆனது. மற்றொரு தகடு வேற்றுப் பொருளினால் ஆனது. ஆக்ஸைடு இரு துருவ முனையை உருவாக்குகிறது.

meta operating system : மீ இயக்க முறைமை : பல இயக்க முறைமைகளை தனக்குக் கீழ் இயக்கவல்ல ஒர் இயக்க முறைமை.

method : முறை;செய்முறை : பொருள் சார்ந்த நிரல் தொடரமைப்பில், ஒரு பொருளின் நடத்தை மற்றும் செயல் தன்மையைக் கட்டுப்படுத்தும் அல்கோரிதம். ஒரு பொருளுக்கு செய்தி அனுப்பப்படும்போது, ஒரு முறை செயல்படுத்தப்படு கிறது. தரவு திருப்பி அனுப்பப்படலாம் அல்லது திருப்பாமல் போகலாம்.

methodology : முறையியல் : தரவுகளை ஒரு ஒழுங்கான முறையில் ஆய்வு செய்யப் பயன்படுத்தப்படும் உத்திகளைத் தொகுக்கும் நடைமுறை. குறிப்பிட்ட பணி ஒன்றை நிறைவேற்றப் பயன்படுத்தப்படும் தரப்படுத்தப் பட்ட நடைமுறைகள், தொழில் நடைமுறைகள், பராமரிப்பு உத்திகள் மற்றும் ஆவணத் தயாரிப்பு உள்ளிட்டவை.

metric system : பதின்ம முறைமை : பன்னாட்டு அளவில் கையாளப்படும் முறைமை அல்லது தற்பொழுது உலகெங்கும் பயன்படுத்தப்படும் பதின்ம முறைமையின் நவீனப் பிரதி. அது ஏழு அடிப்படை அலகுகளைக் கொண்டது. அவை மீட்டர், கிலோகிராம், விநாடி, ஆம்பியர் கெல்வ், செல்சியஸ், கேண்டெலா மற்றும் மோல்.

metropolitan area exchange : மாநகரப் பரப்பு இணைப்பகம் : ஒரு மாநகரப் பரப்புக்குள் இணையச் சேவை நிலையங்கள் ஒன்றிணைக்கப்படும் இணைப்பகம். மாநகரப் பரப்புக்குள் இருக்கும் ஒரு பிணையத்திலிருந்து இன்னொரு பிணையத்துக்கு அனுப்பப்படும் தரவு இணையத்தின் முதன்மை முது, கெலும்புப் பிணையம் வழியாகப் பயணிக்காது. மாநகர இணைப்பகமே இப்பணியை மேற்கொள்ளும்.

metropolitan area network : பெரு நகரப் பிணையம்.

M-flops : எம்- ஃபிளோப்ஸ் : விநாடிக்கு பத்து இலட்சம் பதின்மபுள்ளி எண் கணக்கீடுகள்.

MFT : எம்எஃப்டீ : குறிப்பிட்ட பணிகளுடன் பல நிரல் தொகுப்பைத் தயாரித்தலுக்கான