பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/930

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

microchart

929

micro coding device




வமைப்பு. இத்தகைய பாட்டைகள் ஐபிஎம் பீசி/ஏ. டீ கணினி களின் பாட்டை அமைப்புடன் இணைப்பு அடிப்படையிலும் மின்சார அடிப்படையிலும் ஒத்தியல்பற்றவை. பீசி/ஏ. டீ பாட்டை போலன்றி நுண்தடப் பாட்டைகள் 16துண்மி (bit), அல்லது 32 துண்மி (bit) பாட்டைகளாகச் செயல்படுகின்றன. பல்பாட்டை நுண்செயலி களினால் தனித்த முறையிலும் இவற்றை இயக்க முடியும்.


microchart : நுண்சிப்பு : செயல்முறையின் (Programme) அல்லது பொறியமைவின் (System) வடிவமைப்பின் இறுதி தரவுகளைக் காட்டும் வரை படம்.


microchip : நுண்மின்சுற்று : மணற் சத்தில் பெரிதாகவுள்ள கன்மம்' (Silicon) என்ற தனிமத்தினாலான நுண்ணிய சிப்பு. இதன் மேற்பரப்பில் பல்லாயிரக் கணக்கான மின்னணுவியல் அமைப்புகளும் (Components), மின்சுற்று வழித் தோரணிகளும் (Circuit patterns) பதிவு செய்யப்பட்டுள்ளன.


microcircuit : நுண்மின்சுற்று : ஒரு குறைக்கடத்திச் சிப்பு மீது செதுக்கப்பட்ட மிகச்சிறு மின்னணுச் சுற்று. டிரான்சிஸ்டர்கள், ரெசிஸ்டர்கள் போன்ற மின்பொருள்கூறுகள் ஒன்றிணைக்கப்பட்டு ஒரு நுண்மின் சுற்று உருவாக்கப்படுகிறது. இது, வெற்றிடக் குழாய்களின் ஒரு தொகுதியாகவோ, தனித்தனி டிரான்சிஸ்டர்களின் இணைப்பாகவோ இல்லாமல் ஒர் ஒற்றை அலகாக வடிவமைக்கப்படுகிறது.


microcode ; நுண்குறியீடு : கணினியில் அமைக்கப்பட்டுள்ள அடிப்படை துணை நிரல்களின் அல்லது போலி நிரல்களின் வரிசைமுறை; கணினியிலுள்ள வன்பொருள்கள் (Hardware) இந்த நிரல்களைப் பொதுவாக நிறைவேற்றும்; எனினும், ஒரு தனி வகை ஆயத்த நிலைக்கு மட்டுமான சேமிப்பு அலகில், இந்த நிரல்கள், நுண் செயல்முறை வகுத் திடத்தக்க கணிப்பொறியை இயக்குவதற்கான கட்டளை களை வகுக்கின்றன.


microcoding : நுண்குறியீட்டு முறை : கூட்டல் பெருக்கல் போன்ற கணினி கட்டளைகளை அமைப்பதற்கு அடிப்படைத் தொடக்கச் செயற்பாடுகளை அல்லது துணை நிரல்களை ஒருங்கிணைத்திடும் கணினி கட்டளை வரைவு.


microcoding device : நுண்குறி மின்சுற்றுயீட்டுச் சாதனம் : மின்சுற்று