பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/931

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

microcomputer

930

microcomputer chip



வழிப்பலகை. இதில் திட்ட அளவுச் செயற்பணிகளை நுண்மின்சுற்று வழிகள் மூலமாகச் செய்விக்க நிரல்கள் நிலையான நிரல்கள் அமைந்திருக்கும். இதன் மூலம், செயல்முறைப் படுத்தும்போது இந்த நிரல்களைக் குறியீட்டு முறைமைப் படுத்துவதற்கான தேவையைத் தவிர்க்கலாம்.

microcomputer : நுண்கணினி : மிக நுண்ணிய கணினி அனைத்திலும் இதுதான் மிகவும் மலிவானது. இவை, முழுமையான செயற்பாட்டுக் கணினிகள். இவை நுண் செய்முறைப்படுத்திகளைப் பயன்படுத்துகின்றன. வீடுகளில் சொந்தக் கணினிகளாகப் பயன்படுத்தப்படுகின்றன. இது, பள்ளிகளிலும், வாணிக நிறுவனங்களிலுங்கூடப் பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது. இது, உட்பாட்டுச் செய்முறைச் சேமிப்புப் பணியினையும், வெளிப்பாட்டுச் செயற்பாடு களையும், ஒர் நிரல் தொகுதிக் கிணங்க மிகக்குறைந்த செலவில் செய்திடும் கணினியாகும்.

microcomputer applications : நுண்கணினிப் பயன்பாடுகள் : வணிகம், தொழில் நுட்பம், தொழில் துறை, வீடுகள் ஆகியவற்றில் நுண் கணினிகள் பயன்படுத்தப்படுகின்றன. ஒளிப்பேழை விளையாட்டு எந்திரங்கள், போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அமைப்புகள், விற்பனை முனையங்கள், அறிவியல் கருவிகள், குருதிப் பரிசோதனைக் கருவிகள், கடன் வசதி அட்டை மற்றும் சரிபார்க்கும் கருவிகள், உந்து ஊர்தி, எரியூட்டுக் கட்டுப்பாடு, பட்டியலிடும் சாதனங்கள் ஆகியவற்றிலும் நுண் கணினிகள் பயன்படுத்தப்படுகின்றன. தொழில் துறையில் நுண் கணினிகள் பயனாகின்றன. நுண்ணலை அடுப்புகள், தையல் எந்திரங்கள், எரி வாயு நிலையங்கள், வண்ணம் பூசும் கருவிகள், செய்முறைத் தரவு அறிவிப்பி, தூய்மைக்கேடு தரவு அறிவிப்பி ஆகியவற்றில் நுண் செயலிகள் பயன்படுகின்றன. பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் கல்விச் சாதனங்களாகவும், வங்கிகளிலும் வணிக மையங்களிலும் பங்கு மாற்று அங்காடிகளிலும் கணினிகள் பெரிதும் பயன்படுத்தப்படுகின்றன.

microcomputer chip : நுண் கணிப்பொறிச் சிப்பு : ஒரு சிப்பிலுள்ள நுண் கணினி. இது நுண் செயலியிலிருந்து வேறுபட்டது. இதில் மையச் செயலகம் (CPU) அடங்கியிருப்பதுடன் அதே