பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/932

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

microcomputer components

931

microcontroller



கன்மத் துண்டில் (சிலிக்கன்), குறிப்பின்றி அணுகும் நினைவகம், எழுதிப் படிப்பதற்கு மட்டுமேயான நினைவகம் (ROM), உட்பாட்டு/வெளிப்பாட்டு மின்சுற்று நெறி ஆகியவையும் அடங்கியுள்ளன. இதனைச் "சிப்பில் கணினி" என்றும் அழைப்பர்.

microcomputer components : நுண்கணினி அமைப்பிகள் : ஒரு நுண் கணினியின் முக்கிய உறுப்புகள். இவை : நுண் செய் முறைப்படுத்தி உட்பாட்டு/ வெளிப்பாட்டு மின்சுற்று நெறி; ஒரு நினைவகம் (எழுதிப் படிப்பதற்கு மட்டுமேயான நினைவகம் (RAM) ; செயல்முறை வகுத்திடத்தக்க, படிப்பதற்கு மட்டுமேயான நினைவகம் (PROM) ; அழித்திடக்கூடிய செயல் முறை வகுத்திடத்தக்க படிப்பதற்கு மட்டுமேயான நினைவகம் (EPROM).

microcomputer development system : நுண்கணினி மேம்பாட்டுப் பொறியமைவு : நுண் கணினி அடிப்படையிலான மற்றப் பொறியமைவுகளைச் சோதனை செய்வதற்கும் உருவாக்குவதற்கும் பயன்படுத்தப்படும் முழுமையான நுண் கணினி அமைவு. இணைப்பி வசதிகள், வாசகத் தொகுப்பி, தவறு கண்டறியும் வசதிகள், ஒரே மாதிரியாக அல்லாத இன்னொரு கணினிக்காக எழுதப்பட்ட எந்திரமொழிச் செயல் முறையை நிறைவேற்றத்தக்க வன்பொருள் திறம்பாடுகள், செயல்முறை வகுத்திடத்தக்க படிப்பதற்கு மட்டுமேயான நினைவகம் (PROM), செயல் முறைப்படுத்துவோர் செய்தி அறிவிப்பி, வட்டு, நாடா உள்பாட்டு/வெளிப்பாட்டுப் பொறியமைவு போன்றவை இதில் அடங்கும்.

microcomputer kit : நுண்கணினி கருவிப் பை : நுண் கணினி விற்பனையாளர்கள் இணைத்துக் காட்டுவதற்காக வைத்துள்ள கருவிகளின் தொகுதி அடங்கிய ஒரு பை.

microcomputer system : நுண்கணினி அமைவு : ஒரு நுண்கணினி, புறநிலைச் சாதனங்கள், செயற்பாட்டுப் பொறியமைவு, பயன்பாட்டுச் செயல் முறைகள் அடங்கியுள்ள பொறியமைவு.

microcontroller : நுண்கட்டுப் படுத்தி : ஒரு குறுகிய பகுதிக்குள் மிகநுட்பமான உருக்காட்சியுடனான ஒரு செய்முறையைக் கட்டுப்படுத்தும் ஒரு சாதனம் அல்லது கருவி. ஒரு கட்டுப்பாட்டுச் செயற்