பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/933

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

microelectronics

932

microimage



பாட்டில் பயன்படுத்தப்படும் நுண் செயல் முறைப்படுத்திய எந்திரம் (நுண் கணினி அல்லது நுண் செயலி). இது, ஒரு செய்முறையில் அல்லது செயற்பாட்டில் மாறுதல்கள் செய்வதற்கு அறிவுறுத்துகிறது அல்லது மாறுதல்களைச் செய்கிறது. எடுத்துக்காட்டாக, தையல் எந்திரங்களை இயக்குவதற்கு ஒரு நுண்கட்டுப்படுத்தியையும் எழுதிப் படிப்பதற்கு மட்டுமேயான நினைவகத்தையும் (ROM) சிங்கர் நிறுவனம் பயன்படுத்துகிறது.

microelectronics : நுண் மின்னணுவியல் : ஒருங்கிணைந்த மின்சுற்று வழிகள், மென்சுருள் உத்திகள், திண்மத் தருக்கமுறை தகவமைவுகள் போன்ற நுண்ம மின்சுற்று வழிகளை உருவாக்குவதற்கான உத்திகளைக் கையாளும் புலம்.

microgram : நுண்கிராம்  : நுண் குறியீடு அல்லது நுண் நிரல்கள் என்று அழைக்கப்படுகின்ற அடிப்படைக் கட்டுப்பாட்டு நிரல்களின் சிறிய தொகுதி.

microfiche : நுண்சுருள் தகடு : நுண் சுருள் படலம்; 10 செ. மீ x 15 செ. மீ (4" x 6" அளவுடையது. இதில் கணினியின் வெளிப்பாடுகளை (output) பதிவு செய்யலாம். ஒரு நுண் சுருள் தகட்டில் 270 பக்கங்கள் வரை பதிவு செய்ய முடியும்.

microfilm : நுண்சுருள்; நுண்படலம் : வரைகலைத் தரவுகளை நுண்ணிய வடிவளவில் பதிவு செய்வதற்குப் பயன்படுத்தப்படும் ஒளிப்படச் சுருள்.

microfloppy disk : நுண் நெகிழ்வட்டு : 9 செ. மீக்குக் குறைவான விட்டமுள்ள (3. 5") நெகிழ்வட்டு.

microform : நுண்படிவம் : நுண்சுருள் தகடு, நுண் சுருள் போன்ற நுண்மையாக்கம் செய்யப்பட்ட உருக்காட்சிகளைக் கொண்ட ஒர் ஊடகம்.

micrographics : நுண்வரை கலை : வரைகலைத் தரவுகளைச் சுருக்கி, சேமித்து வைத்து, மீண்டும் வரவழைப்பதற்காக நுண்ம ஒளிப்படக் கலையைப் பயன்படுத்துதல். நுண்சுருள் தகடு, நுண்சுருள், கணினி வெளிப்பாட்டு நுண்சுருள் போன்ற எல்லா வகையான நுண்படிவங்களையும், நுண் உருக்காட்சிகளையும் பயன் படுத்துவதும் இதில் அடங்கும்.

microimage : நுண்படிமம் : ஒளிப் படமாக்கிச் சிறிதாக்கப் பட்ட படிமம். பொதுவாக நுண் படச் சுருள்களில் சேமித்து வைக்கப்படும். மிகவும் சிறி