பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/936

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

microprogramme

935

Microsoft C



பதிப்பி சாதனங்களைச் செயல் முறைப்படுத்துவதன் மூலம் தனித் தனித் தேவைகளுக்கேற்ப செயல் முறைகளை வகுத்தமைக்கக்கூடிய ஒரு கணினி. இதனால், ஒரு கணினியானது முதன்மைப் பொறியமைவாக அல்லது நுண் கணினியாக இருப்பினும் கோட்பாட்டு முறைப்படி அதனை நுண் செயல்முறைப்படுத்திட இயலும்.

microprogramme : நுண் நிரல் தொடர்; நுட்பு நிரல் : ஆரம்ப நிரல்களின் வரிசை. இவற்றை நுண் செயலகத்தில் உள்ள நுண் அளவை துணை அமைப்பாக மாற்றப்படும்.

microprogramming : நுண் செயல்முறைப்படுத்துதல் : ஒரு கணினியின் கட்டுப்பாட்டுப் பகுதியை இயக்குவதற்கான முறை. இந்தப் பகுதியில் ஒவ்வொரு அறிவுறுத்தமும் பல சிறிய செயல்களாகப் (நுண் செயல்கள்) பகுக்கப்பட்டிருக்கும். இவை, ஒரு நுண் செயல்முறையின் ஒரு பகுதியாக அமைந்திருக்கும்.

micropublishing : நுண் வெளியீடு : நுண்வரைகலையில் பயன்படும் சொல். விற்பனை அல்லது விநியோகத்திற்காக புதிய அல்லது மறு வடிவமைக்கப்பட்ட தரவுவை நுண் திரைப்படத்தில் வெளியிடுவது.

microspace justification : நுண் இட ஓரச்சீர்மை : உரை ஆவணங்கள் இரு ஓரங்களிலும் சீராக இருப்பின் அழகான தோற்றத்தைத் தரும். இவ்வாறு ஆவணங்களின் உரைப் பகுதியின் ஒரங்களைச் சீராக ஆக்கும் பொருட்டு சொற்களின் இடையேயும் ஒரு சொல்லில் எழுத்துகளுக்கிடையேயும் மெல்லிய இடவெளியை இட்டு நிரப்புதல். இதனை நுண் ஓரச்சீர்மை என்றும் கூறுவர். சொல்லில் இடம்பெறும் அதிகப்படியான இடவெளி சொல்லின் தோற்ற அழகைத் தோற்கடித்துவிடும்.

microsecond : நுண்வினாடி : ஒரு வினாடியின் பத்து இலட்சத்தில் ஒரு பகுதி. இதன் சுருக்க வடிவம் : μs அல்லது μsec.

Microsoft C : நுண்மென் பொருள் சி : நுண்மென்பொருளின் 'சி' தொகுப்பி. பல வகையான வணிக உற்பத்திப் பொருள்களை உருவாக்கப் பயன்படுத்தப்படுகிறது. விண்டோஸ் நிரல் தொடரமைப்பதற்குத் தேவைப்படும் நுண்மென் பொருள் விண்டோஸ் மென் பொருள் வளர்ச்சி சாதனம். பீ. சி. பயன்பாடு வளர்ச்சிக்காக