பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/937

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

microsoft word

936

microwave



பீ. சி. யில் பயன்படுத்தப்படுவதற்கு 'சி மொழியில் அதிகம் பயன்படுவது மைக்ரோ நுண் மென்பொருள் 'சி' மற்றும் போர்லேண்டில் டர்போ 'சி' ஆகிய இரண்டும் ஆகும்.

microsoft word : நுண்மென்பொருள் சொல் : மைக்ரோ சாஃப்ட் நிறுவனம் மெக்கின்டோஷ் கணினி மற்றும் பீ. சி. க்களுக்காக உருவாக்கிய எல்லா தன்மைகளும் நிறைந்த சொல் செயலாக்க நிரல்தொடர். டாஸ் பதிப்பு ஒரு ஆவணத்தில் வரைகலை மற்றும் சொற்பகுதி சார்ந்த இடைமுகங்களின் மூலம் பணியாற்ற உதவுகிறது. Word for windows என்று அழைக்கப்படும் விண்டோசுக்கான மைக்ரோசாஃப்ட் வேர்ட் மென்பொருள் நவீன வசதிகள் கொண்டதாக விண்டோஸ்களில் பணியாற்ற ஏற்றதாக உள்ளது.

microsoft works : நுண்மென் பொருள் பணிகள் : மெக்கின்டோஷ் மற்றும் பீ. சி-க்களுக்கான ஒருங்கிணைந்த மென்பொருள் பொதி அல்லது தொகுப்பு. மைக்ரோசாஃப்ட் நிறுவனம் உருவாக்கியது. உறவு போன்ற திறன்களுடன் கோப்பு மேலாண்மை சொல் செயலாக்கம், விரிதாள், வணிக வரைகலை மற்றும் தரவு தொடர்பு திறன்கள் ஆகிய அனைத்தும் கொண்ட தொகுப்பாக இது கிடைக்கிறது.

microspacing : நுண் எழுத்திடை வெளி அமைவு : அச்சுத் துறையில் மிகச்சிறிய தொலைவுகளுக்கு நகர்த்துவதற்கு அனுமதிக்கும் இடைவெளியமைவு. இது, நுண் வரிச் சரியமைவிலும், நிழல் அச்சுக் கலையிலும் பயன்படுத்தப்படுகிறது. இதனை மிகைப்பாட்டு எழுத்திடை வெளியமைவு என்றும் கூறுவர்.

micro to mainframe linkage : நுண்ணிலிருந்து பெருமுக இணைப்பு  : பயன்படுத்துபவரின் மேசையில் உள்ள பெருமுகக் கணினி அமைப்புக்கும் தனி நபர் கணினி அமைப்புகளுக்கும் இடையில் தகவல் தொடர்பு நடைபெற அனுமதிக்கும் வன் பொருள்/மென்பொருள்.

microtransaction : நுண் பரிமாற்றம்  : 5 டாலருக்கும் குறைவான தொகைக்கான ஒரு வணிகப் பரிமாற்றம் இவ்வாறு அழைக்கப்படுகிறது.

microvirus : நுண் நச்சுநிரல்

microwave : நுண்ணலை : சென்டி மீட்டர் அளவில் ஓர் அலைநீளம் கொண்டுள்ள மின்காந்த அலை. மின் காந்த