பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

arrow key

93

artificial neural network



arrow key : அம்புக்குறி விசை : கணினித் திரையில் தோன்றும் அல்லது தேர்வுப்பட்டியல் கட்டுக் குறியை விருப்பத் தேர்வுக்களில் குறியை மேல் கீழாக, பக்கவாட்டில் நகர்த்து வதற்குப் மேல், கீழ், வலம், இடம் நோக்கிய பயன்படக்கூடிய, மேல், கீழ், வலம், இடம் அம்புக்குறி இடப்பட்ட விசைகள்.

article : கட்டுரை செய்திக் குறிப்பு : இணையத்தில் செய்திக்குழுவில் (news- group) வெளியிடப்பட்டுள்ள ஒரு செய்திக் குறிப்பு. கடிதம் என்றும் கூறப் படுவதுண்டு.

article Selector : கட்டுரை தேர்வி.

artificial inteligence (A )  : செயற்கை நுண்ணறிவு : ஒரு எந்திரம் எவ்வளவு அறிவுத் திறனுடன் இருக்க முடியும் என்பதை விளக்கும் கணினி அறிவியலின் ஒரு பிரிவு பகுத் தறிதல், கற்றல் போன்ற மனித அறிவுத்திறனோடுபுடைய செயல்களைச் செய்யும்தொடர் கருவி ஒன்றின் திறனோடு தொடர்புடையது.

artificial language : செயற்கை மொழி : வரையறை செய்யப்பட்ட விதிகளை அடிப்படையாகக் கொண்ட மொழி இவ்விதிகள் அதன் பயன்பாட்டுக்கு முன் உருவாக்கப்பட்டதாகும். இது இயற்கையான மொழிக்கு வேறுபட்டதாகும்.

artificial life : செயற்கை உயிர் : வாழும் உயிரினங்களின் நடத்தையில் சில கூறுகளை போலச் செய்யும் கணினி அமைப்புகள் பற்றிய ஆய்வு. ஒரு குறிப்பிட்ட பணியை நிறைவேற்ற எழுதப்பட்ட நிரல், அதன் செயல்த்திறனை அடிப்படையாகக் பட்டச்செயல் கொண்டு, தகவமைத்தல், தப்பிப்பிழைத்தல் இனம்பெருக்குதல் போன்ற மனிதப் பண்புகளின் மொத்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு செய்ய முடியும். இந்த நிரல்கள் ஒரு சிக்கலுக்கு மிகச்சரியான தீர்வு கிடைக்கும்வரை தம்மைத் தாமே தொடர்ந்து மாற்றிக் கொள்கின்றன. இத்தகைய நிரல்களை இயக்கும் கணினி முறைமைகளை செயற்கை உயிர் என்கின்றனர்.

artificial network : செயற்கைப் பிணையம்.

artificial neural network : செயற்கை நரம்புசார் பிணையம் : மனிதனின் மூளையும் நரம்பு மண்டலமும் ஒரு பிணையம் (network) செயல்படுகின்றன. மனித உடலில்