பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/943

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

minor key

942

mirror site


 minor key : துணை விசை : ஒரு பதிவேட்டை அடையாளம் காணப் பயன்படுத்தும் துணை விசை. சான்றாக, மாற்றங்களை கணக்கு எண் மற்றும் தேதி வாரியாக பிரித்தல். இதில் கணக்கு எண் பெருவிசை. தேதி துணைவிசை.

minor sort key : குரும வகைப்பாட்டுப் பகுதி ; சிறு வரிசையாக்கத் துணைச் சாவி  : பதிவேடுகளை வகைப்படுத்துவதற்கான இரண்டாம் நிலைப் பாகுபாட்டு ஆதாரங்களைக் கொண்ட தரவுப் புலம். பெரும வகைப்பாட்டுப் பகுதியில் இரு மடியாக்கங்கள் நடைபெறும் போது மட்டுமே இது பயன்படுத்தப்படுகிறது.

MIP mapping : மிப் பொருத்துகை, மிப் படமாக்கம் : குறைவில் நிறைய என்று பொருள்படும் Multi-turn is Parvo (Much in Little என்பதன் லத்தீன் தொடர்) என்பதன் சுருக்கமே MIP எனப்படுகிறது. படமாக்கிய ஒரு படிமத்தைச் சுற்றுத் தொலைவிலிருந்தே முன்கணக்கிட்டு ஒரு வரைகோல (Texture) படமாக்கியில் பயன்படுத்தப்படுகிறது. படப்புள்ளி மாற்றுகை மனிதக் கண்புலனுக்கேற்ப நிறங்களை மாற்றித்தரும் என்பதால், படமாக்கிய உருவங்களின் இதமான வரை கோலத்திற்கு வழிவகுக்கும்.

mips : மிப்ஸ் : Million Instructions Per Second என்பதன் குறும் பெயர். ஒரு வினாடிக்குப் பத்து இலட்சம் ஆணைகள். ஒரு பெரிய கணினியமைவு, ஒரு வினாடி நேரத்தில் நிறைவேற்றும் எந்திர மொழி ஆணைகளின் சராசரி எண்ணிக்கையைக் குறிக்க இது பயன்படுகிறது.

mirror image : ஆடி பிம்பம் ; கண்ணாடிப் பிம்பம்.

mirroring : கண்ணாடி உருக்காட்சி : ஓர் உருக்காட்சியைச் சித்திரித்துக் காட்டும் வரைகலைச் செய்திக் குறிப்பினை, அதன் நேர்தலை கீழ் பிம்பமாகக் காட்டும் கண்காட்சி அல்லது உருவாக்கம். பல கணினி வரைகலைப் பொறியமைவுகள், காட்சித் திரையில், ஒரு வரைகலை உருக் காட்சியைத் தானாகவே தலைகீழாகப் பிரதிபலித்துக் காட்டுகின்றன.

mirror site : நகல் தளம்; பிம்பத் தளம் : ஒரு கோப்பு வழங்கன் கணினி. பிணையத்திலுள்ள முக்கிய வழங்கன் கணினியிலுள்ள கோப்புகளின் நகல்களைக் கொண்டிருக்கும் தரவு போக்குவரத்துச் சுமையைப் பகிர்ந்து கொள்வதற்காகவும்,