பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/944

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

MIS

943

.ml


அதிகமான தரவு போக்குவரத்தைக் கையாள உயர்திறன் வழங்கனின் தேவையைப் தவிர்ப்பதற்காகவும் பிம்பத் தளங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

MIS:எம்ஐஎஸ்:மேலாண்மைத் தகவல் பொறியமைவு என்று பொருள் படும்"Management Information System"என்ற ஆங்கிலத் தலைப் பெழுத்துச் சொல்.

missconvergence:காட்சித்திருப்பம்.

misspelled words:பிழைச் சொற்கள்.

mistake:பிழை;தவறு:மனிதர் செய்யும் சிறு பிழை. இதனால், தவறான கணிப்பு,தவறான கணினி நிரல்களைப் பயன் படுத்துதல்,தவறான விசையை அழுத்துதல்,கணினி செயல் முறையில் தவறான சூத்திரங் களைப் பயன்படுத்துதல் போன்ற கருதப்படாத விளைவுகள் ஏற்படக்கூடும்.

.mi.us:.எம்ஐ.யுஎஸ்:ஒர் இணைய தள முகவரி அமெரிக்க நாட்டு மிச்சிகன் மாநிலத்தைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

mixed cell reference:கலப்புக் கலக் குறிப்பு:விரிதாள்களில் ஒரு கலம் பற்றிய குறிப்பு. (ஒரு வாய்பாட்டினைக் கணக்கிட்டு விடை காணத் தேவைப் படும் ஒரு கலத்தின் முகவரி). கலத்தின் கிடக்கை(Row)அல்லது நெடுக்கை தொடர்புறு(Relative)குறிப்பாக இருக்கும்(வாய்பாட்டினை நகலெடுத்தாலோ நகர்த்தினாலோ தானாகவே மாறிக்கொள்ளும்). மற்றது நிலையாக இருக்கும். (வாய் பாட்டினை நகலெடுத்தாலோ நகர்த்தினாலோ மாறாதது).

mixed number:கலப்பு எண்:முழு எண் பகுதியும் பின்னப்பகுதியும் கொண்ட ஒர் எண். எடுத்துக்காட்டு: 63.71;-18,006;298.413,

mixed object:கலவைப் பொருள்.Compound document போன்றது.

mixing:ஒலிக் கலவை.

mix with file:கோப்புடன் சேர்.

.mk:.எம்கே:ஒர் இணைய தள முகவரி மாசிடோனியா நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

.ml:.எம்எல்:ஒர் இணைய தள முகவரி மாலி நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப் பிரிவுக் களப் பெயர்.