பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/945

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ML

944

ΜΝΡ10


ML : எம் எல் : 'வித்தகர் மொழி'என்று பொருள்படும்'Manipulator Language"என்ற ஆங்கிலச் சொற்றொடரின் தலைப்பெழுத்துச் சொல். இது, எந்திர மனிதர்களைக் கட்டுப்படுத்துவதற்கு IBM என்ற முதன்மைப் பொறியமைவு நிறுவனம் பயன்படுத்தும் செயல்முறைப் படுத்தும் மொழி.

. mm : . எம்எம் : ஒர் இணைய தள முகவரி மியன்மார் நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக்களப்பெயர்.

MMX : எம்எம்எக்ஸ் : பல்லூடக நீட்டிப்புகள் எனப் பொருள்படும் (Multimedia Extensions) என்ற தொடரின் சுருக்கம். இன்டெல் 80x86 குடும்பச் செயலிகளில் ஒரு குறிப்பிட்ட வகைச் செயலிகள். பல்லூடக மற்றும் தகவல் தொடர்புப் பயன் பாடுகளுக்கான கூடுதல் திறன் கொண்டவை. இவற்றின் நிரல் தொகுதியில் அதற்கான கூடுதல் நிரல்களைக் கொண்டவை.

. mn : . எம்என் : ஒர் இணைய தள முகவரி மங்கோலியா நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

mnemonic : நினைவூட்டு வாசகம்;நினைவுபடுத்தி : மனிதர் எளிதில் நினைவில் பதித்து வைத்துக் கொள்ளக்கூடிய வாசகங்கள்;நினைவில் இருத்தி வைத்துக் கொள்வதற்கான உத்திகள்.

mnemonic code : நினைவூட்டு வாசகக் குறியீடு;நினைவூட்டுக் குறியீடு : எளிதில் நினைவில் வைத்துக் கொள்ளக்கூடிய இணைப்பு மொழிக் குறியீடு. எடுத்துக்காட்டு : பெருக்கல் (Multiply) என்பதற்கு'MPY"என்ற சுருக்கெழுத்தைப் பயன் படுத்துதல்.

mnemonic language : நினைவூட்டு வாசக மொழி : எளிதில் நினைவில் வைத்துக் கொள்ளக்கூடிய சைகைகளின் அடிப்படையில் அமைந்த செயல் முறைப்படுத்தும் மொழி. இந்தச் சைகைகளைக் கணினி மூலம் எந்திர மொழியாக இணைக்கலாம்.

MNP10 : எம்என்பீ10 : மைக்ரோகாம் பிணைய நெறிமுறை என்று பொருள்படும் (Microcom Networking Protocol Class 10) என்ற தொடரின் சுருக்கம். தொடர்முறை செல் தொலைபேசி (Analog Cellular Tele- phone) களுடன் இணைக்கப்படும் மோடம் இணைப்புகளுக்கான தொழிலகச் செந்தரத் தகவல் தொடர்பு நெறிமுறை.