பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/948

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

modem

947

modem bank


பகுதிகளைத் துல்லியமாக உருப்படுத்திக் காட்டும் செய் முறை.

modem மோடம் (அதிர் விணக்க நீக்கி) : Modulator-Demodulator என்ற இரண்டு சொற்களின் முதலெழுத்துகளைச் சேர்த்து இச்சொல் உருவாக்கப்பட்டது. குரல்-நிலை தகவல் தொடர்பு வசதிகளின் சமிக்கைகளை ஏற்றும், மாற்றியும் அனுப்பிப் பெறுகின்ற சாதனம். தொலை பேசிக் கம்பி இணைப்புக்கு கணினியையோ அல்லது முனையத்தையோ ஆற்றுப்படுத்துகின்ற சாதனம். பெறும் இடத்தில் கணினியில் இலக்க முறை துடிப்புகளை ஒலி அலைவரிசைகளாகவும் அவற்றை மீண்டும் துடிப்பு களாகவும் மாற்றித் தருகிறது. கணினியின் உள்ளேயும் மோடெத்தைப் பொறுத்து முடியும். வெளிப்பகுதியில் மோடெத்தை வைத்தால் 'போர்ட்' மூலம் அது கணினியில் சேர்கிறது. தொலைபேசியில் அழைப்பது, பதில் சொல்வது ஆகியவற்றை மோடெம் கையாள்கிறது. இவற்றை அனுப்பும் வேகம் ஒரு நொடிக்கு 300 முதல் 33, 600 துண்மிகள் அல்லது அதற்கு மேற்பட்டதாகும். தொலைபேசிமூலம் அழைக்கும் மோடெத்தின் சராசரி வேகம் ஒரு நொடிக்கு 2, 400 துண்மிகள். 33, 600 துண்மிகள் திறனுள்ளது பிரபலமாகிறது. ஒரு நொடிக்கு 2, 400 துண்மிகள் என்ற வேகத்தில் இயங்கும்போது 7 நொடிகளில் 2, 000 எழுத்துகளைக் கொண்ட ஒரு திரையை நிரப்பும். எழுத்து விகிதமானது துண்மி விகிதத்தில் 10%. ஆகவே, 2, 400 துண்மிகள் ஒரு நொடிக்கு என்பது 240 எழுத்துகள் ஒரு நொடிக்கு என்பதாகும். மோடெத்தில் பார்க்க வேண்டியது அதிவேகம், பிழை சோதித்தல் மற்றும் தகவல்களைச் சுருக்கல் ஆகியவையே. புதிய மோடெம்கள் தானாகவே பிற மோடெம்களின் வேகத்திற்கும், வன்பொருளின் விதிமுறைகளுக்கும் சரிசெய்து கொள்கிறது.

modem bank : இணக்கி வங்கி;மோடம் வங்கி : ஒர் இணையச் சேவையாளர் அல்லது ஒரு பிபிஎஸ் சேவை இயக்குநர் பராமரிக்கின்ற வழங்கன் கணினியுடன் அல்லது தொலை அணுகு வேன் (WAN) பிணையத்தில் இணைக்கப்பட்ட இணக்கி (மோடம்) களின் தொகுப்பு இவ்வாறு அழைக்கப் படுகிறது. தொலைதூரப் பயனாளர்கள் ஏதேனும் ஒரு குறிப்