பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/949

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

modem eliminator

948

moderated discussion


பிட்ட ஒற்றைத் தொலைபேசி எண்ணை அழைத்தாலே, அப்போது பயன்பாட்டில் இல்லாத தொகுதியிலுள்ள வேறொரு எண்ணுக்கு திசைமாற்றித் தரும் வகையில் பெரும்பாலான இணக்கி (மோடம்) வங்கிகளின் இணக்கிகள் உள்ளமைக் கப்பட்டுள்ளன.

modem eliminator : மோடெம் விலக்கி : நெருக்கமாக உள்ள இரண்டு கணினிகள் மோடெம் இல்லாமலேயே தொடர்பு கொள்ள அனுமதிக்கும் சாதனம். தனிநபர் கணினிகளுக்கு, இது தேவையான மென்பொருளைக் கொண்ட முழு மோடெம் போன்றதாகும். ஒத்திசைவு (சின்க்ரனஸ்) அமைப்புகளில் ஒத்திசைவுக்கு அறிவுக் கூர்மையை அளிக்கிறது.

modem port : இணக்கித் துறை : ஒரு சொந்தக் கணினியில் புற இணக்கியை (மோடத்தை) இணைத்துப் பயன்படுத்தக் கூடிய ஒரு நேரியல் துறை (Serial port).

moderated : கண்காணிக்கப்பட்ட முறைப்படுத்தப்பட்ட : செய்திக்குழு, அஞ்சல் பட்டியல் அமைப்புகளிலும், அல்லது பிற செய்திப் பரிமாற்ற அமைப்புகளிலும் பொருத்தமில்லாத சர்ச்சைக்கு இடமாகும் கட்டுரைகள் அல்லது செய்திகள் உறுப்பினர்களுக்கு அனுப்பப் படுவதற்கு முன்னரே நீக்கி விடும் உரிமை அக்குழுவின் கண்காணிப்பாளருக்கு உண்டு. இத்தகைய குழுச் செய்திப் பரிமாற்றங்களில் அனைவரும் ஏற்றுக் கொள்ளத்தக்க நாகரிகமான கருத்துரைகளையே அஞ்சல் செய்ய வேண்டும் என்பதை நினைவில் கொள்க.

moderated discussion : முறைப்படுத்தப்பட்ட உரையாடல் : அஞ்சல் பட்டியல், செய்திக் குழு அல்லது பிற நிகழ்நிலை மன்றங்களில் நடை

பெறுவது. கண்காணிப்பாளர் ஒருவரால் முறைப்படுத்தப்படும் தகவல் பரிமாற்றம். உரையாடலில் ஒருவர் தன் செய்தியை அனுப்பியதும், அச்செய்தி நடைபெற்றுக் கொண்டிருக்கும் உரையாடலுக்கு பொருத்தமானதா என்பதை கண்காணிப்பாளர் முடிவு செய்வார். பொருத்தமானது எனில் அச்செய்தியை குழு முழுமைக்கும் சமர்ப்பிப்பார். முறைப்படுத்தப்படாத உரையாடல்களைவிட முறைப்படுத்தப்பட்ட உரையாடல் அதிக மதிப்புடையது. ஏனெனில் முறையற்ற செய்தி களைகண்காணிப்பாளர் ஒரு காவலாளிபோல் இருந்து