பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/952

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

modular element

951

modulator


வொரு கூறும் ஒரு குறிப்பிட்ட பணியை நிறைவேற்றுமாறு வடிவமைக்கப் படும். இம் முறையினால் உருவாக்க நேரமும், பரிசோதனை நேரமும் மிச்சமாகும். சிலபல கூறுகளை ஒன்றுக்கு மேற்பட்ட திட்டப் பணிகளுக்கும் பயன்படுத்திக் கொள்ளவும் முடியும்.

modular element : கூறுநிலை உறுப்பு.

modularity : தகவமைவுத் திறன் : கணினிகளை ஒரு தொகுப்புக் கட்டிடத்தில் வடிவமைப்பில் உருவாக்கும் கோட்பாடு. இது, சாதனத்தின் திறம்பாட்டை உயர்த்தவும், சிக்கன முறையான மேம்பாட்டுக்கும் உதவும்.

modular programming : தகவமைவுச் செயல்முறைப்படுத்துதல் : எளிதாக இடமாற்றம் செய்யக் கூடிய, சிறிய கணினி வாலாயங்களை உருவாக்குகிற செயல்முறைப்படுத்துதல். இது, தரஅளவான இடைமுகப்புத் தேவைகளை நிறைவு செய்யும். செயல்முறையைச் செயற்பணிகளை முழுமையாகச் செய்யக் கூடிய வகையில், குறிப்பிட்ட பகுதிகளாகப் பகுத்து இது செய்யப் படுகிறது. மிகவும் சிக்கலான செயல்முறைகளையும் பொறியமைவு களையும் உருவாக்குவதற்கு இது உதவுகிறது.

modulatanty : கூறுநிலைமை.

modulate : பண்பேற்று : ஒரு சமிக்கையின் சில பண்பியல்புகளை ஒரு நோக்கத்துடன் மாற்றியமைத்தல். பொதுவாக தகவலை வேறிடங்களுக்கு அனுப்பி வைக்கும் பொருட்டு இவ்வாறு பண்பேற்றம் செய்வதுண்டு.

modulation/demodulation : பண்பேற்றம்/பண்பிறக்கம்;அதிர் விணக்கம் : செய்திக் குறிப்புகளை அனுப்புவதில், உயர் அதிர்வெண் ஊர்திக்கு குழுஉக் குறியின் சில பண்புகளை, தாழ் அதிர்வெண்தரவு குழுஉக் குறிக்கு இணங்கியவாறு மாற்றும் செயல் முறை. கணினி சேர்முனையக் குழுஉக் குறிகளை செய்தித் தொடர்பு வசதிகளுக்கு ஏற்பு உடையதாக செய்வதற்குத் தரவுத் தொகுதிகளில் இது பயன்படுகிறது.

modulator : குறிப்பேற்றி;அதிர்விணக்கி : தரவுக் குறிப்புச் செயல்

முறைப்படுத்தும் எந்திரத்திலிருந்துவரும் மின்னியல் துடிப்புகளை அல்லது துண்மிகளைப் பெற்றுக்கொண்டு அவற்றைச் செய்தித் தொடர்பு இணைப்பின் வழியாகச்